நடிகர் சூர்யா நடிப்பில் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசான படம் ‘சீன்’. இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான இப்படம்,ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த கதைக்களத்துடன் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசிம் மற்றும் நஸ்லென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு சீரியல் கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான சப்ஜெக்ட், அதிரடியான சீன்கள், காமெடி என அனைத்தும் கலந்த பொழுதுபோக்கு படமாக ‘சீன்’ உருவாகியுள்ளது. குறிப்பாக,மலையாளத் திரையுலகில் கவனம் பெற்ற டைரக்டர் ஜித்து மாதவன் தமிழில் அறிமுகமான படம் என்பதால், ரிலீஸிற்கு முன்பே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
தியேட்டர்களில் வெளியான இப்படம் உலகளவில் 295 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் சூர்யாவின் சினிமா பயணத்தில் முக்கியமான வெற்றிப் படமாக ‘சீன்’ அமைந்துள்ளது.
இந்நிலையில்,இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ‘சீன்’படம் வரும் வெள்ளிக்கிழமை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தியேட்டர்களில் இப்படத்தைப் பார்க்கத் தவறிய ரசிகர்கள் தற்போது வீட்டிலிருந்தே கண்டுகளிக்கலாம்.
தியேட்டர் வசூலில் கவனம் ஈர்த்த ‘சீன்’, ஓடிடி ரிலீசிலும் ரசிகர்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




