வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கங்குவா அதுக்கு மட்டுமே டபுள் மடங்கு எகிறிய பட்ஜெட்.. பாதி படத்திற்கே மொத்தத்தையும் காலி செய்த சூர்யா டீம்

Actor Surya Kanguva: சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த வருடமும் இவருடைய படம் எதுவும் வெளிவரப் போவதில்லை. ஆனால் அடுத்த வருடத்தை இவருக்கான வருடமாக மாற்ற வேண்டும் என்பதற்காக களமிறங்கிய படம் தான் கங்குவா. இப்படத்தில் சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் உருவாகி கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இரு தினங்களுக்கு முன் சூர்யாவின் பிறந்தநாள் அன்று கங்குவா படக்குழு ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அரண்டு போய் கங்குவா படத்திற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: கையில் வாளுடன் வேட்டையாட தயாரான சூர்யா.. வைரலாகும் கங்குவா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

மேலும் இப்படம் அதிகமான செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. பிரம்மாண்டம் என்றாலே கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்க வேண்டியதாகத்தான் இருக்கும். அந்த வகையில் தற்போது கொஞ்சம் பிரச்சனையில் மாட்டி இருக்கிறது. இப்படத்தை எடுக்கும் சிறுத்தை சிவா முதலில் 200 கோடி பட்ஜெட் மட்டுமே தயாரிப்பாளரிடம் சொல்லி இருக்கிறார்.

ஆனால் இப்பொழுது நினைத்ததையும் தாண்டி 300 கோடி வரை போயிருக்கிறது. இப்படம் இன்னும் பாதி மட்டுமே முடிந்திருக்கிறது. பாதி படத்திற்கே 250 கோடி கிட்ட செலவாயிருக்கிறது. அப்படி என்றால் இன்னும் மீதமுள்ள படத்தை எடுப்பதற்குள் போட்ட பட்ஜெட்டை விட டபுள் மடங்கு எகிறிவிடும்.

Also read: லியோவுக்கு ஜெயிலர் கொடுத்த அதிர்ச்சியே இன்னும் குறையல.. சூடு ஆறும் முன் போட்டிக்கு வந்த சூர்யா

அடுத்ததாக இந்த படம் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுகிறது. இதில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே CG காட்சிகள் இருக்கிறதாம். அதனால் கண்டிப்பாக இப்படம் 300 கோடிக்கும் மேல் தாண்டி விடும் என்ற நிலைமைக்கு வந்து விட்டது. இப்படி கஜானா காலி பண்ணுகிற அளவிற்கு கண்ணா பின்னா என்று பட்ஜெட் போவதால் தயாரிப்பாளருக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.

எப்படியாவது இந்த படத்தை சீக்கிரத்தில் எடுத்து முடித்து, போட்ட காசை எடுக்கிற வரை தயாரிப்பாளர் பயத்துடன் தான் சுற்றி வருவார். ஆனால் இப்படம் பத்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளிவர இருப்பதால் கண்டிப்பாக லாபத்தை மட்டுமே பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Also read: சூர்யாவுக்கு தொடர்ந்து வந்த தவறான விமர்சனங்கள்.. விருதுகள் மூலம் பதிலடி கொடுத்த 6 படங்கள்

Trending News