லவ் டுடே ரிலீஸுக்கு முன்பே அட்வான்ஸ் கொடுத்து லாக் செய்த சூர்யாவின் மாமா.. அடுத்தடுத்து பிசியாகும் பிரதீப்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் லவ் டுடே திரைப்படம் தற்போது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரிலீசான முதல் நாளிலேயே பல பாசிட்டிவ் விமர்சனங்களை ஏற்படுத்திய இந்த திரைப்படம் வசூலிலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. மிக குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பல மடங்கு வசூலை பெற்றிருப்பது படகுழுவினரை சந்தோஷப்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் யார் இந்த இயக்குனர் என்று அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு பிரதீப் ரங்கநாதன் மிகப்பெரிய செலிபிரிட்டியாகவும் மாறி இருக்கிறார். தற்போது எங்கு திரும்பினாலும் அவருடைய பேட்டி தான் அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு இவர் சோசியல் மீடியாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்.

Also read : தவறான கண்ணோட்டத்தில் வெளிவந்த லவ் டுடே விமர்சனம்.. அதுக்கு செல்வராகவனை இழுத்து இருக்க வேண்டாம்

இப்படி ஒரு வரவேற்பை யாரும் நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த படத்தால் பிரதீப் அடுத்தடுத்து பிசியான நடிகராக மாறி இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவருடைய அடுத்த படம் யாருடன் என்ற பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது பிரதீப் ரங்கநாதனை வைத்து அடுத்ததாக ஒரு படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

சூர்யாவின் உறவினரான ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் ஏகப்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். தற்போது சூர்யாவின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படத்தையும் இந்த நிறுவனம்தான் பிரம்மாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இவர்கள் பிரதீப் ரங்கநாதனை வேறு யாரும் வளைத்து பிடித்து விடக்கூடாது என்பதற்காகவே இப்போது அட்வான்ஸ் கொடுத்து புக் செய்திருக்கிறார்கள்.

Also read : நான்கே நாட்களில் போட்ட காசை டபுள் மடங்காக எடுத்த லவ் டுடே.. மொத்த வசூல் விவரம்

இதற்கு முன்னதாகவே இவர்கள்தான் லவ் டுடே திரைப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில பல காரணங்களால் இந்த நிறுவனத்தால் அப்படத்தை தயாரிக்க முடியாமல் போனது. அதன் பிறகு இந்த படத்தின் டிரைலரே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதை பார்த்த ஞானவேல் ராஜா இந்த முறை விட்டுவிடக்கூடாது என்பதற்காக படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து புக் செய்து இருக்கிறார்.

ஏனென்றால் இப்படம் கிட்டத்தட்ட 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தற்போது பல மடங்கு வசூலை பெற்றிருக்கிறது.. அதனாலயே ஞானவேல் ராஜா, பிரதீப்பை மிஸ் செய்து விடக்கூடாது என்று வேக வேகமாக பேச்சுவார்த்தை நடத்தி அட்வான்ஸ் கொடுத்துள்ளார். அதனால் கூடிய விரைவில் பிரதீப்பின் அடுத்த பட அறிவிப்பு வெளிவர இருக்கிறது.

Also read : அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கும் சூர்யாவின் மொத்த பட லிஸ்ட்.. இரண்டு பாகங்களாக உருவாகும் சூர்யா 42