வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிரமிக்க வைக்கும் மதகஜராஜாவின் வசூல் வேட்டை ..10 வருடத்திற்கு முன் சுந்தர் சி, விஷால் வாங்கிய சம்பளம்

பொங்கல் ரேசில் களமிறங்கிய மதகஜராஜா படம் மட்டுமே ரசிகர்களை கவர்ந்துள்ளது. வணங்கான், கேம் சேஞ்சர், காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் மத்தியில் விஷால் சுந்தர் சி கூட்டணியில் உருவான இந்த படம் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகள் ஓடி வசூல் வேட்டை ஆடி வருகிறது.

பத்து வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த படம் இப்பொழுது பவர் புல் ஹிட்டித்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரிலீசாகி நான்கு நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது ஆனால் செலவழித்த மொத்த பட்ஜெட்டையும் கலெக்ஷன் செய்துள்ளது.

2013இல் பூஜை போடப்பட்ட இந்த படம் அப்பொழுது 15 கோடிகளில் உருவானது. இடையில் பல தடைகள் வந்ததால் அப்படியே அலமாரியில் பூட்டி வைக்கப்பட்டது. படத்தை தயாரித்த ஜெமினி ஃபிலிம்ஸ் நிறுவனர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதனால் தொடர்ந்து ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

இப்பொழுது ஜனவரி 12ஆம் தேதி சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் நான்கு நாட்களில் 13 கோடிகள் வசூலித்து சாதனை செய்துள்ளது. விஷால் நடிப்பில் எந்த ஒரு படமும் இப்படி ஒரு வசூல் வேட்டை ஆடியது கிடையாது.

அப்பொழுது இந்த படத்திற்காக விஷால் வாங்கிய சம்பளம் ஒரு கோடி. இயக்குனர் சுந்தர் சி 2 கோடிகள் சம்பளமாக பெற்றார். இப்பொழுது படம் சக்சஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் பத்து நாட்களுக்கு மேல் ஓடியது என்றால் 50 கோடிகளை எளிதாக எட்டி விடும்.

Trending News