ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

காலில் விழுந்து சரண்டரான தம்பதிகள்.. இறங்கி வர யோசிக்கும் ராஜ்கிரண்

தற்போது சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி கொண்டிருக்கும் ராஜ்கிரண் ஒரு காலத்தில் ஹீரோவாகவும் நடித்து கலக்கியிருக்கிறார். சினிமாவில் இவரை பார்ப்பதை தவிர சினிமா விழாக்கள் போன்ற எதிலும் யாரும் இவரை அதிகமாக பார்க்க முடியாது.

மேலும் அவர் இதுவரை யாருக்கும் அவ்வளவாக பேட்டி கூட கொடுத்தது கிடையாது. இந்நிலையில் இவருடைய வீட்டு பிரச்சினை ஒன்று சமூக காலமாக சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதாவது சில நாட்களுக்கு முன் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் சீரியல் நடிகர் ஒருவரை வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also read:வளர்த்த கெடா மாரில் முட்டியது.. வேதனையில் ராஜ்கிரணின் பதிவு

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்கிரண், அவர் தன் சொந்த மகள் கிடையாது வளர்ப்பு மகள் தான் என்ற உண்மையை ஊர் உலகத்திற்கு தெரியப்படுத்தினார். மேலும் தன் மகளின் கணவர் தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கோடு தான் அவரை திருமணம் செய்திருப்பதாகவும், அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் இனிமேல் எந்த உறவும் கிடையாது என்றும் அவர் காட்டமாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் தற்போது தன்னை வளர்த்த அம்மாவிடம் தஞ்சம் அடைந்துள்ளாராம். எப்படியாவது அப்பாவிடம் கூறி எங்களை ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள் என்று கெஞ்சி இருக்கிறார். மகளின் மீது அதிக பாசம் கொண்ட ராஜ்கிரணின் மனைவியும் தற்போது அவருக்காக தூது போயிருக்கிறாராம்.

Also read:ராஜ்கிரணின் மகளை திருமணம் செய்து கொண்ட காமெடி நடிகர்.. மதம் பிரச்சனைகளை சமாளித்த காதல் ஜோடி

கடும் கோபத்துடன் இருக்கும் ராஜ் கிரண் தன் மனைவியின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து தன் மகளை ஏற்றுக் கொள்வாரா என்று தான் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். கூடிய விரைவில் அவர் தன் மகளை மன்னித்து ஏற்றுக்கொள்வார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகின்றது.

அந்த வகையில் அவர் தன் மகளின் திருமணத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாக அறிக்கை கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். அதற்கான பேச்சுவார்த்தைகள் தான் தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறதாம்.

Also read:ராஜ்கிரண் கல்லாகட்டிய 5 திரைப்படங்கள்.. நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என அசத்திய 2 படங்கள்

Trending News