புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முனீஸ்காந்த்க்கு ஹீரோயினான சர்வைவர் புகழ்.. தரமான கதையில் புது முயற்சி

தமிழில் முண்டாசுப்பட்டி, ஜிகர்தண்டா, டான் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் முனீஸ் காந்த். காமெடி, குணச்சித்திரம் போன்ற பல கதாபாத்திரங்களில் கலக்கிய இவர் தற்போது புதிய படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

இதில் அவருக்கு ஜோடியாக சென்னை 28 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி நடிக்க இருக்கிறார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றது குறிப்பிடத்தக்கது.

மிடில் கிளாஸ் என்ற தலைப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தை கிஷோர் முத்துராமலிங்கம் இயக்குகிறார். ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்டு படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

குடும்ப பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில் மாளவிகா அவினாஷ், வடிவேல்முருகன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு விஜயலட்சுமி திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாமல் இருந்தார்.

மேலும் சன் டிவி சீரியல், பிக்பாஸ், சர்வைவர் உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் அவருக்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அவர் இன்னும் சில திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் விஜயலட்சுமி தற்போது கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் வகையிலான கதைக்காக காத்து கொண்டிருக்கிறார்.

Trending News