வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சூர்யாவை கழட்டி விட்ட பாலிவூட், டிராப் ஆன 600 கோடி ப்ராஜக்ட்.. கங்கா அதான் சந்திரமுகியா மாறுனாங்களோ ?

Suriya: சோழியான் குடுமி சும்மா ஆடாது என்று சொல்வார்கள்.அப்படித்தான் இருக்கிறது சமீபத்தில் ஜோதிகா போட்ட போஸ்ட். நடிகர் சூர்யாவின் தியேட்டரில் படங்கள் நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றிருக்கின்றன.

ஆனால் அப்போதெல்லாம் ஜோதிகா இந்த அளவுக்கு பொங்க வில்லை. ஆனால் கங்குவா படம் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றபோது ஜோதிகாவால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் கணவரையும் பாலிவுட்டில் ஹீரோவாகி, 2D தயாரிப்பு நிறுவனத்தையும் அங்கே வளர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தான்.

டிராப் ஆன 600 கோடி ப்ராஜக்ட்

பாலிவுட்டிற்கு அஸ்திவாரம் போட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலேயே இப்படி ஒரு நெகட்டிவ் விமர்சனம் என்றால் யாரால் தான் தாங்கிக் கொள்ள முடியும். என்னதான் ஜோதிகா உள்ளே புகுந்து ஆட்டையை கலைச்சாலும், பாலிவுட் சினிமா உலகத்தினர் உஷாராகி விட்டார்கள்.

மகாபாரதத்தில் வரும் கர்ணன் கேரக்டரை மையமாக வைத்து இந்தியில் கர்ணா என்ற தலைப்பில் படம் இயக்க திட்டமிட்டு இருந்தார்கள். இதில் சூர்யா தான் ஹீரோ, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் திரௌபதி கேரக்டரில் நடிக்க இருந்தார்.

600 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகமாக இந்த படம் உருவாக இருந்தது. ஆனால் சூர்யா சமீபத்தில் நடித்து ரிலீசான கங்குவார் படம் பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றிருப்பதால் தற்போது இந்த பட குழு, இந்த ப்ராஜெக்ட் வேண்டாம் என டிராப் செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் மட்டும் வொர்க் அவுட் ஆகி இருந்தால் கண்டிப்பாக சூர்யா பாலிவுட்டில் ஒரு வலம் வந்திருப்பார். இதனால் தான் கங்கா சந்திரமுகி மாறி இருந்தாங்க போல.

Trending News