வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜோதிகா எடுத்த முடிவால் திக்கி திணறும் சூர்யா.. முட்டி மோதிக்கொள்ளும் சுதா கொங்கரா

Suriya Jothika: தானம் கொடுக்கிற மாட்டை பல்ல புடிச்சு பதம் பாக்க கூடாதுன்னு சொல்லுவாங்க. அப்படி ஒரு வேலையை தான் சூர்யா எப்போது செய்து கொண்டு இருக்கிறார். சூர்யாவின் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு என்று ரசிகர்கள் அதிகம்.

ஜோதிகாவை அவர் உறுதி உறுதி காதலிப்பதால் தான் அவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் இருக்கிறார்கள். மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்வார்கள் தான், ஆனால் ஒரு சில நேரங்களில் நமக்கு எது செட் ஆகும் என்று யோசிப்பதில் தவறில்லை.

எட்டு வருஷத்துக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்த ஜோதிகாவுக்கு இப்பதான் கோலிவுட்டில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது தெரிந்திருக்கிறது. இதனால் மலையாளம் மற்றும் இந்தி சினிமா பக்கம் தாவி விட்டார்.

அதிலும் பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட் படங்களில் நடிப்பதற்காகத்தான் ஜோதிகா மும்பை போனார் என்று கூட ஒரு செய்தி வெளியானது. அப்படி இருக்கும் பட்சத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கும் தன்னுடைய காதல் கணவர் சூர்யாவும் பாலிவுட் பக்கம் வரவேண்டும் என ஆசைப்படுகிறார் ஜோதிகா.

சூர்யாவும் ஜோதிகாவின் பேச்சுக்கு மறுப்பேச்சு இல்லை என்பது போல் தான் இருக்கிறார். ஆனால் இதற்காக அவர் முட்டி மோதிக் கொண்டிருப்பது இயக்குனர் சுதா கொங்கரா உடன் தான். சூரரைப் போற்று கூட்டணியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது.

தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய அடையாளத்தை அந்த படம் கொடுத்தது. இந்த படத்தின் மூலம் தான் ஆஸ்கார் விருது பட்டியலில் ஜூரி ஆக பங்கேற்க அழைப்பு கூட சூர்யாவுக்கு எல்லாம் வந்தது. இதை தொடர்ந்து சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணி புறநானூறு படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

முட்டி மோதிக்கொள்ளும் சுதா கொங்கரா

இந்த படம் முழுக்க முழுக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டது. காதல் மனைவிக்கு பாலிவுட் மீது தீராத ஆசை இருக்கும் பொழுது, இந்தி தெரியாத போடா என்று சொல்வதற்கு சூர்யாவுக்கு மனம் வரவில்லை.

இன்றைக்கு எதிராக வன்மையாக எழுதப்பட்ட வசனங்களை எல்லாம் மாற்றும் படி சூர்யா சுதாவிடம் சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் வேறொரு நாவலை கொண்டு வந்து காட்டி நாம் ஏன் இதை படமாக எடுக்க கூடாது என்று வேற அசடு வழிந்து இருக்கிறார்.

சுதா கொங்கராவின் படங்களில் எப்போதுமே ஒரு தனித்தன்மையான ஆளுமை இருக்கும். சூர்யாவுக்காக அதை கண்டிப்பாக அவர் மாற்றிக் கொள்ள முன்வர மாட்டார். இப்படி மனைவிக்காக பாலிவுட்டில் நடிக்க ஆசைப்பட்டு தமிழ் சினிமா ரசிகர்களை ஏமாற்றப் போகிறாரோ சூர்யா என தோன்றுகிறது.

மும்பை சென்ற பின் சூர்யா வாழ்க்கையில் வெடித்த பிரச்சனைகள்

Trending News