திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வளர்த்து விட்ட 5 இயக்குனர்களை தூக்கி எறிந்த சூரியா.. சாப்பிட்டு கை கழுவுவதற்குள் நன்றி மறக்கும் சினிமா

பாலா: சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அடையாளத்தை மாற்றியவர் இவர் கண் பார்வையில் சூர்யா விழ இவரை வைத்து நந்தா மற்றும் பிதாமகன் என்ற படங்களை கொடுத்தார். நந்தாவில் நடித்ததற்கு பிறகு சூர்யாவின் சினிமாவே மாறிவிட்டது அந்தளவுக்கு அவர் நடிப்பை வெளிக்கொண்டு வந்தார் பாலா. ஆனால் கடைசியில் வணங்கான் படத்தில் சூர்யா பெரிய ஹீரோவாக வளர்ந்து விட்டதால் பாலாவை தூக்கி எறிந்து விட்டார்.

அமீர்: இவர் பாலாவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்ததால் சூர்யாவை வைத்து முதல் படமான மௌனம் பேசியதே படத்தை எடுத்தார். இந்த படத்தின் மூலம் சூரியா அனைத்து பெண்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் பிடித்த ஹீரோவாக வளர்ந்தார். அதன்பின் அமீர் சூர்யாவுடன் சேர்வதற்கு விரும்பாத அளவிற்கு இவர்களுக்கு பிரச்சனை வந்தது.

கௌதம் வாசுதேவ் மேனன்: தனது ஸ்டைலிஷ் ஆன படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் அடையாளத்தை மாற்றினார். இவர் சூர்யாவை வைத்து காக்க காக்க படத்தை கொடுத்து சூர்யாவின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிக்கக்கூடியவர். அடுத்து வாரணம் ஆயிரம் என்ற படத்தைக் கொடுத்து சூர்யாவின் அந்தஸ்தை தக்க வைத்தவர். அனைத்து மக்களுக்குமே சூர்யாவை பிடித்ததற்கு இவரும் ஒரு காரணம். ஆனால் இனிமேல் இவருடன் படமே பண்ண மாட்டேன் என்று சொல்லும் அளவிற்கு சண்டை போட்டு தூக்கி எறிந்து விட்டார் சூர்யா.

Also Read : நடிக்க தெரில, பிஞ்சி மூஞ்சி, சாக்லேட் பாய்.. சூர்யாவின் தலையெழுத்தையே மாற்றிய அசிஸ்டன்ட் டைரக்டர்

ஹரி: எந்த பெரிய ஹீரோவாக இருந்தாலும் போலீசாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அந்த ஆசையை ஹரி நிறைவேற்றி சிங்கம் என்ற ஒரு படத்தை மூன்று பாகங்களாக எடுத்து வெற்றி பெற வைத்தார். இதிலிருந்து ஒரு நிலையான மாஸ் ஹீரோ என்ற நிலையில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இவருடன் இரண்டு, மூன்று படங்கள் செய்தாலும் கடைசியில் இவருடனும் சண்டை போட்டு சூர்யா அடுத்த பட வாய்ப்பு கொடுக்கவே இல்லை.

ஏ ஆர் முருகதாஸ்: இவர் படங்களில் மூலம் சூர்யா உலகம் முழுவதும் அறியப்பட்டார் காரணம் ஏ ஆர் முருகதாஸ் படம் பிரம்மாண்டமாக இருக்கும். இவர்படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் அனைவராலும் அறியப்படும் அளவிற்கு படம் வெற்றி பெறும். கஜினி என்ற ஒரு படத்தில் நடித்த சூர்யா டாப் 5 ஹீரோ அந்தஸிற்குள் உள்ளே வந்தார். ஒரு கட்டத்தில் ஏ.ஆர் முருகதாஸ் சூர்யாவிடம் கால் சீட் கேட்டு இவரை நிராகரித்தவர் சூர்யா.

இப்படி தன்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் நன்றாக வளர்த்து விட்ட டைரக்டர்களுடன் தொடர்ந்து பணியாற்றி கடைசியில் வளர்ந்த பிறகு அவர்களுடன் தேவையில்லாத பிரச்சனையில் ஈடுபட்டு அவர்களுக்கு கால் சீட் கொடுக்காமல் தூக்கி எறிந்தவர் சூர்யா. தற்போது சுதா கோங்கராவ் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் இவரின் நிலைமை என்னவென்று போக போகத் தெரியும்.நல்ல மனிதராக நல்ல கதாநாயகனாக இருந்தாலும் இந்த மாதிரி கெட்ட பெயர் சூர்யாவிற்கு இருந்த வருவது அவரது ரசிகர்களுக்கு வருத்தம்.

Also Read : கொந்தளித்து மேடையிலேயே கோவப்பட்ட அமீர்.. சூர்யா கார்த்தி சண்டையைக் கிண்டிய பிரஸ்மீட்

Trending News