சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அனாவசிய பிரச்சனைகள் வேண்டவே வேண்டாம்.. ஜெட் வேகத்தில் எஸ்கேப் ஆகும் சூர்யா

கதைகளைத் தேர்வு செய்வதிலும், ஒருவருக்கு கால் சீட்டு கொடுப்பதிலும் ஸ்கெட்ச் போட்டு வேலை செய்கிறார் சூர்யா என்றே சொல்லலாம். யாரிடம் எப்படி நடந்து கொள்வது, எப்படி சென்றால் பிரச்சனைகள் வராது. இப்படி நடந்து கொண்டால் நாம் தப்பிக்கலாம் என்று ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து செய்கிறார் சூர்யா.

ஏற்கனவே சூர்யா நிறைய பிரச்சனைகளை சந்தித்து விட்டார். இவர் ஒடிடிக்கு அதிக படங்கள் கொடுக்கிறார் என தியேட்டர் ஓனர்கள் போர்க்கொடி தூக்கினர். இனிமேல் சூர்யா படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என்றும் பிரச்சினையை கிளப்பி வந்தனர்.

இவ்வாறு சூர்யா நிறைய பிரச்சனைகளை சந்தித்து, இப்போது அதை எல்லாம் சரி செய்து வருகிறார். ஒவ்வொரு இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் தேர்வு செய்வதில் அவர் பெரிதும் யோசித்து முடிவெடுக்கிறார்.

சூர்யா ஏற்கனவே கமிட்டான சிறுத்தை சிவா படத்தை கூட ஒரு வருடம் தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது. சிவா இயக்கும் படத்தை தயாரிக்க இருந்த அவரது உறவினரான ஞானவேல் ராஜா பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

இப்படி அடிக்கடி பிரச்சனைகளில் சிக்கி வரும் ஞானவேல் ராஜாவிற்கு கூட படம் பண்ணுவதற்கு பெரிதும் யோசிக்கிறார் சூர்யா. அதனால்தான் அந்தப் படத்திற்கு இப்படி ஒரு இடைவெளி வந்துவிட்டது.

இப்பொழுது அந்த கால்ஷீட்டை யுவி கிரியேஷனிடம் ஒப்படைத்து விட்டார். இதிலிருந்து சூர்யா அனாவசிய பிரச்சனைகள் வேண்டவே வேண்டாம் என எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்குவதாக தெரிகிறது.

Trending News