லியோவுக்கு ஜெயிலர் கொடுத்த அதிர்ச்சியே இன்னும் குறையல.. சூடு ஆறும் முன் போட்டிக்கு வந்த சூர்யா

Actor Suriya: பாக்ஸ் ஆபிஸ் நடிகர்களுக்குள் அண்மைக்காலமாகவே யாரை யார் முந்துவது என்ற போட்டி நடந்து வருகிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படமாக மாறி இருக்கிறது.

அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படமும் ஆரவாரமாக வெளியாக இருக்கிறது. அடுத்தடுத்து முதல் பாடல், இரண்டாம் பாடல் என வெளியிட்டு ஆர்வத்தை தூண்டி வரும் பட குழு தற்போது இசை வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறது.

Also read: சூர்யாவால் கொலை நடுங்கி போன திரையுலகம்.. உச்சகட்ட பயத்தில் ப்ராஜெக்ட் கே, ஜவான் படக்குழு

மேலும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாடல் மூலம் ரஜினி, விஜய் போட்டி ஆரம்பமான நிலையில் இப்போது சூர்யாவும் பங்குக்கு வந்திருக்கிறார். அந்த வகையில் ரஜினி கொடுத்த அதிர்ச்சியே இன்னும் குறையாத நிலையில் சூர்யாவும் அந்த சூடு ஆறுவதற்கு முன்பாகவே உச்சகட்ட பயத்தை கொடுத்து இருக்கிறார்.

எப்படி என்றால் இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா பட குழு அட்டகாசமான ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. இதுவரை ஜெயிலர், லியோ படங்களுக்கு இருந்த ஆரவாரத்தை எல்லாம் அடித்து நொறுக்கும் வகையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவை தற்போது ஆதிக்கம் செய்து வருகிறது.

Also read: ஒரே வார்த்தையில் தெறிக்க விட்ட சூர்யா.. அசுரத்தனமாக வெளிவந்த கங்குவா கிளிம்ஸ் வீடியோ

அதிலும் சூர்யாவின் மிரட்டலான தோற்றமும், நடிப்பும் நிச்சயம் யாரும் எதிர்பார்க்காததாக இருக்கிறது. அந்த வகையில் ஹாலிவுட் தரத்திற்கு இப்படம் இருக்கும் என இப்போதே கருத்துக்கணிப்புகள் வெளிவர தொடங்கிவிட்டது. அது மட்டும் இன்றி 1000 கோடியை பட குழு சாதாரணமாக வசூலித்து விடும் என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளது.

இதன் மூலம் லியோ படத்திற்கு இருந்த மாஸ் கொஞ்சம் குறைந்துள்ளதாகவே சினிமா ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அரண்டு போய் இருக்கும் பட குழு அடுத்த கட்ட யோசனையில் இறங்கி இருக்கிறார்களாம். இருப்பினும் கங்குவா தற்போது சர்வதேச அளவில் அனைவரையும் மிரட்டி விட்டிருக்கிறது என்பது தான் உண்மை.

Also read: சூர்யாவுக்கு தொடர்ந்து வந்த தவறான விமர்சனங்கள்.. விருதுகள் மூலம் பதிலடி கொடுத்த 6 படங்கள்