வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உயிரை விட்ட 2 ரசிகர்கள்.. அஜித் செய்யாததை, செய்த நடிகர் சூர்யா

Actor Surya: நடிகர் சூர்யாவின் 48வது பிறந்தநாள் நேற்று அவருடைய ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ரத்த தான முகாம், அன்னதானம் என ரசிகர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு நிறைய நற்பணிகளையும் செய்தார்கள். மேலும் கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டு படக்குழுவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

மகிழ்ச்சியான தருணங்களுடன் முடிய வேண்டிய சூர்யாவின் பிறந்தநாள், நேற்று ஒரு சோகமான நிகழ்வுடன் முடிந்திருக்கிறது. ஆந்திராவை சேர்ந்த சூர்யாவின் ரசிகர்கள் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பேனர் கட்டும் பொழுது, அது மின் கம்பத்தில் உரசி மின்சாரம் பாய்ந்ததில் இருவருமே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

Also Read:சூர்யாவின் பிறந்த நாளை தடபுடலாக கொண்டாட நினைத்ததால் ஏற்பட்ட விபரீதம்.. நெஞ்சை பதைபதைக்க வைத்த சம்பவம்

சூர்யாவின் பிறந்த நாளின் போது இப்படி ஒரு சம்பவம் நடந்தது அவருடைய ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது கண்டிப்பாக சூர்யாவுக்கும் இந்த விஷயம் மனதளவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சம்பவத்தை கேள்வி பட்டவுடன் நடிகர் சூர்யா அந்த இரண்டு ரசிகர்களின் குடும்பத்தை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் சொல்லி இருக்கிறார். மேலும் அவர்களுக்கு என்ன உதவி தேவைப்படுகிறது அதை எல்லாம் செய்து தருகிறேன் என்று வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார்.

Also Read:சூர்யாவால் கொலை நடுங்கி போன திரையுலகம்.. உச்சகட்ட பயத்தில் ப்ராஜெக்ட் கே, ஜவான் படக்குழு

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்த சூர்யா நினைத்திருந்தால் பொறுமையாக இரண்டு, மூன்று நாட்கள் கூட கழித்து அந்த குடும்பத்தினரை தொடர்பு கொண்டு இருக்கலாம். ஆனால் அவர் அவர்களுடைய சோகத்தில் பங்கெடுத்துக் கொண்டது உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது. நிறைய நடிகர்கள் போன்ற விஷயங்களை செய்வதில்லை.

சமீபத்தில் நடிகர் அஜித்குமாரின் துணிவு பட ரிலீசின் போது அவருடைய ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டார். அஜித் குமார் அந்த குடும்பத்தை தொடர்பு கொண்டாரா, ஏதேனும் உதவி செய்தாரா என்று இதுவரை யாருக்கும் தெரியாது. அவர் வீண் விளம்பரங்களை விரும்ப மாட்டார் என்று சொல்லிக்கொண்டாலும், இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கும்படி ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டும் என ஏதாவது ஒரு கடிதமோ அல்லது வீடியோவோ வெளியிட்டு இருக்க வேண்டியது அவருடைய கடமை.

Also Read:ஒரே வார்த்தையில் தெறிக்க விட்ட சூர்யா.. அசுரத்தனமாக வெளிவந்த கங்குவா கிளிம்ஸ் வீடியோ

Trending News