ஜோதிகா வேற ஒருத்தர் கூட நடிக்கிறது பிடிக்காது.. அது தான் காரணம்

கங்குவா படத்தின் ப்ரோமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த நிலையில் பல ஸ்வாரஸ்யமான் விஷயங்களை சூரிய ஒவ்வொரு பெட்டியிலும் பகிர்ந்து வருகிறார். படம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி வெளியாகிறது.

சூர்யா உட்பட படக்குழு அனைவரும் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். படத்தை பற்றி பல விஷயங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டு வருகின்றனர். கங்குவா படத்தை தவிர மற்ற படங்களை பற்றியும் சூர்யா பேசி வருகின்றார்.

என் மனைவி வேற ஒருவர் கூட நடிப்பது பிடிக்காது

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சூர்யா சொன்ன ஒரு விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சில்லுனு ஒரு காதல். இப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா ஆகியோர் நடித்திருந்தனர்.

என்னதான் இப்படம் வெளியான சமயத்தில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் தற்போது ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சூர்யா இப்படத்தை பற்றி பேசுகையில், சில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா? என யோசித்துக்கொண்டிருந்தேன்.

“அப்போது ஜோதிகா இப்படத்தில் நான் கண்டிப்பாக நடிப்பேன் என சொல்லிவிட்டார். ஜோதிகா வேறொரு நடிகருடன் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. எனவே தான் சில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்க சம்மதித்தேன்” என நகைச்சுவையாக பேசியிருந்தார் சூர்யா.

இவர்களின் காதலை பார்த்து பொறாமை படைத்தவர்களே இல்லை.. நாளுக்கு நாள் இவர்கள் காதல் அதிகமாகி தான் வருகிறது. வாழ்ந்தால் இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று உண்மையில் ரசிகர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றனர்.

Leave a Comment