வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூழ்நிலையை பொறுத்து உதவனும்.. சந்தடி சாக்கில் விஜய்யை சீண்டிய சூர்யா

Actor Suriya: விஜய், சூர்யா இருவரும் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாகி வருகின்றனர். அதில் லியோ படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு கங்குவா படத்திற்கும் இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் சூர்யா பேசியுள்ள ஒரு விஷயம் விஜய்யை சீண்டுவது போல் அமைந்திருக்கிறது.

அதாவது அகரம் அறக்கட்டளையின் மூலம் சூர்யாவின் குடும்பத்தினர் பல மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகின்றனர். முதலில் சிவக்குமார் தன் நண்பர்களுடன் இணைந்து நடத்தி வந்த இந்த அறக்கட்டளை இப்போது அரசுடன் இணைந்து தங்கள் பணியை செய்து வருகிறது.

Also read: ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை அறைந்த இயக்குனர்.. ரகசியத்தை வெளியில் சொன்ன வில்லன்

இதில் ஒவ்வொரு வருடமும் தங்கள் கனவை அடைந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும். அந்த வகையில் தற்போது நடந்த விழாவில் சூர்யா மாணவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் பேசியது பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் கல்வியின் மூலமாக வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள் என்று அவர் பேசியது மாணவர்களுக்கான சிறந்த டிப்ஸாக இருந்தது.

மேலும் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பத்து ரூபாயை யாராவது எடுத்துவிட்டார்கள் என்றால் மொத்த பணத்தையும் நீங்கள் தூக்கி எறிய மாட்டீர்கள். அந்த மாதிரி யாராவது உங்களை குற்றம் சொன்னால் அந்த பத்து வினாடிக்காக மொத்த நாளையும் வீணடிக்க வேண்டாம் என்று உற்சாகப்படுத்தும் வார்த்தைகளையும் கூறினார்.

Also read: விஜய்யின் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்த காமெடி நடிகர்.. இது என்னடா தளபதிக்கு வந்த சோதனை

இவ்வாறு மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பேசிய சூர்யா விஜய்யை சீண்டும் விதமாகவும் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு இருந்தார். அதாவது முதல் இடம் பிடித்தவர்கள் என்று பார்க்காமல் கல்வி கற்கும் சூழ்நிலையை பொறுத்து எல்லோருக்கும் உதவனும் என கூறினார். அதாவது விஜய் சமீபத்தில் 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை நேரில் வரவைத்து பாராட்டி உதவி தொகை வழங்கினார்.

இது பாராட்டுகளை பெற்றாலும் சூர்யா கூறியிருக்கும் இந்த விஷயமும் ஏற்புடையதாகவே இருக்கிறது. அந்த வகையில் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து வந்து தங்களை நிரூபிக்கும் மாணவர்கள் அனைவருக்குமே உதவ வேண்டும் என்று கூறி மறைமுகமாக விஜய்யை அவர் குத்தி காட்டி இருக்கிறார். இதற்கு விஜய் தரப்பிலிருந்து எந்த மாதிரியான ரியாக்ஷன் வரும் என்பதை தான் தற்போது பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Also read: பிக்பாஸ் எல்லாம் எனக்கு முக்கியம் இல்ல.. விஜய் பட நடிகை பின்னால் போன விஜய் டிவி ரக்சன்

Trending News