சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்தப் படம் ஏர்டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. சமீபத்தில் இந்த படத்திற்கு ஐந்து தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், படம் ஆகிய பிரிவுகளில் சூரரைப் போற்று படம் தேர்வாகி இருந்தது.
Also Read :சூர்யாவின் உண்மை பெயரை மாற்றிய நபர்.. அனுமதிக்காக சிவகுமாரிடம் போன சிபாரிசு
இந்நிலையில் நேற்று 68 ஆவது தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த படத்திற்கான விருதை சூரரை போற்று படத்தின் தயாரிப்பாளர் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பாக ஜோதிகாவும் விருதினை பெற்றனர்.

மேலும், சூர்யா விருது வாங்கும் போது ஜோதிகாவும், ஜோதிகா விருது வாங்கும் போது சூர்யாவும் புகைப்படங்கள் எடுத்தனர். இந்த விருதினை அவர்கள் குழந்தைகளுக்கு கொடுத்த அழகு பார்த்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Also Read :இணையத்தில் அடித்துக்கொள்ளும் விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள்.. இப்படியெல்லாமா அசிங்கப்படுத்துறது

மேலும் சூரரைப் போற்று படக்குழு மற்றும் சூர்யா, ஜோதிகா இருவருக்கும் தேசிய விருது வாங்கியதற்காக வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இத்தனை வருட திரை வாழ்க்கையில் சூர்யா கடுமையாக உழைத்ததற்கு இப்போது அவருக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர்.
Also Read :பெரும் தலைவலியில் மாட்டிக்கொண்ட சூர்யா.. கடுமையாக எச்சரிக்க தயாரிப்பாளர்