திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சூர்யாவுக்கு தொடர்ந்து வந்த தவறான விமர்சனங்கள்.. விருதுகள் மூலம் பதிலடி கொடுத்த 6 படங்கள்

Actor Surya: நடிகர் சூர்யா இன்று தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கிறார். ஆனால் அவர் முதன்முதலில் சினிமாவுக்கு வந்த போது பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தார். நடிக்கவே தெரியவில்லை, சிவகுமாரின் மகன் என்பதால் ஈசியாக உள்ளே வந்து விட்டால் என பல பேச்சுக்களை கேட்டார். ஆனால் இன்று உலக சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கார் வரை இவரை அழைக்கும் அளவிற்கு தன்னை வளர்த்துக் கொண்டார். அதேபோன்று பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.

சூரரை போற்று: இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அடையாளமாக மாறிவிட்டது. 68 ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில் இந்த திரைப்படம் 5 விருதுகளை வாங்கியது. இதில் சூர்யா சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இந்த படத்திற்கு பிறகு ஆஸ்கர் விருது நிர்வாகம் சூர்யாவை ஜூரிக்காக அழைப்பு விடுத்தது.

Also Read:சூர்யாவால் கொலை நடுங்கி போன திரையுலகம்.. உச்சகட்ட பயத்தில் ப்ராஜெக்ட் கே, ஜவான் படக்குழு

நந்தா: சேது திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாலாவிடம் தயங்கி, தயங்கி வாய்ப்பு கேட்ட நடிகர் சூர்யா அந்தப் படத்தின் மூலம் தன்னை நடிகனாக நிரூபித்தார். பல வருடங்களாக ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த நடிகர் சூர்யாவுக்கு இந்த படம் தமிழ்நாடு மாநில விருது வாங்கிக் கொடுத்தது.

கஜினி: தீனா மற்றும் ரமணா பட வெற்றிக்கு பிறகு கஜினி படத்தின் கதையை பல முன்னணி ஹீரோக்களுக்கு சொல்லி அவர்கள் எல்லோரும் மறுத்து விடவே வாய்ப்பு இல்லாமல் இருந்த ஏ ஆர் முருகதாஸுக்கு இந்த படத்திற்கு ஓகே சொல்லி வாய்ப்பு கொடுத்தது நடிகர் சூர்யா. இந்த படத்திற்கும் அவருக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது கிடைத்தது.

பிதாமகன்: நந்தா படத்தின் மூலம் சூர்யாவை ஒரு நல்ல நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த பாலா, பிதாமகன் திரைப்படத்தின் மூலம் சூர்யாவுக்கு நகைச்சுவையும் கைவந்த கலை தான் என்பதை நிரூபிக்க வைத்தார். இந்த படத்திற்கு பிறகு தான் சூர்யா எப்பேர்பட்ட கதைகளிலும் நடிப்பார் என இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நம்பிக்கை வந்தது. இந்த படத்திற்காக சிறந்த சப்போர்ட்டிங் கேரக்டர் பிலிம்பேர் விருதை பெற்றார்.

Also Read:ஒரே வார்த்தையில் தெறிக்க விட்ட சூர்யா.. அசுரத்தனமாக வெளிவந்த கங்குவா கிளிம்ஸ் வீடியோ

காக்க காக்க: நடிகர் சூர்யா ஆக்சன் ஹீரோவாக வெற்றி பெற்ற திரைப்படம் தான் காக்க காக்க. நேருக்கு நேர் திரைப்படத்தில் பார்த்த சூர்யாவா இது என ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் காக்கி சட்டையில் முறுக்கு மீசையுடன் மிரட்டி இருந்தார் சூர்யா. இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

பேரழகன்: சினிமாவில் ஒரு சில நடிகர்கள் தான் ஒவ்வொரு படத்திற்காகவும் தங்களை வருத்திக் கொண்டு நடிப்பார்கள். அந்த லிஸ்டில் கமல் மற்றும் சீயான் விக்ரமுக்கு அடுத்து பார்த்தால் நடிகர் சூர்யா தான் இருக்கிறார். பேரழகன் படத்தில் கூன் விழுந்த சின்னா கேரக்டரில் இவர் நடித்திருப்பார். இந்த படத்திற்காக அவரது சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

Also Read:கொல மாஸாக வெளிவந்த கங்குவா பட போஸ்டர்.. அடேங்கப்பா! அசந்து போன சூர்யா

Trending News