ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

ஒரு படத்திற்கு இரண்டு வருஷமா.? கடுப்பில் வெற்றி இயக்குனரை கிடப்பில் போட்ட சூர்யா

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இதைத்தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து வந்தது. இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் சூர்யா மீண்டும் ஒரு வெற்றிக் கூட்டணியில் இணைய உள்ளார் என்ற செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் கடந்த ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான படம் ஜெய் பீம். இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது.

மேலும் முதல்வரிடம் இருந்தும் சூர்யாவுக்கு பாராட்டு கிடைத்தது. இந்நிலையில் மீண்டும் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கயுள்ளார். இந்நிலையில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே மிக குறுகிய காலத்தில் இப்படத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஜெய்பீம் படமும் குறைந்த பட்ஜெட்டில் மிக குறுகிய காலத்தில் எடுத்ததுதான். மேலும், இப்படத்தையும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தான் தயாரிக்கிறது. வெற்றிமாறன் சூரியை வைத்து கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தில் மும்மரமாக வேலை செய்து வருவதால் அதற்குள் சூர்யா இந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் வாடிவாசல் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை வாடிவாசல் படத்தை முடித்துவிட்டு ஞானவேல் படத்தை தொடங்குவார் எனவும் கூறப்படுகிறது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.

Trending News