சூர்யாவின் கங்குவா படம் நவம்பர் 14ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்தபடியாக பெயரிடப்படாத சூர்யா 44 படத்தில் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைகிறார். ஏற்கனவே சூர்யா நடிக்க கமிட்டாகி இருந்த ஹிந்தி படம் மற்றும் கன்னட படம் ட்ராப் ஆகிவிட்டது.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா மற்றும் சுதா கொங்காரா கூட்டணியில் உருவாக இருந்த படம் புறநானூறு. இந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார். ஹிந்தி எதிர்ப்பு சம்பந்தமான கதை என்பதால் இந்த படத்திற்கு பல பிரச்சனைகள் வரும் என முன்கூட்டியே எச்சரிக்கையுடன் ஒதுங்கி விட்டார்.
இப்பொழுது இந்த படத்தை வேறு ஒரு பெயரில் மீண்டும் சுதா கொங்கார இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏற்கனவே சிவகார்த்திகேயன் ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் இப்பொழுது சுதா கொங்காராவிற்கு சூர்யாவின் 2டி நிறுவனத்தால் பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
புறநானூறு படத்திற்கு 2 டி தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இன்னும் என்ஓசி கொடுக்கவில்லையாம். ஏற்கனவே சூர்யா நிறுவனத்தாரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது, ஆனால் இன்னும் இந்த பிரச்சனை நீண்டு கொண்டே போகிறது. கடந்த மூன்று மாத காலமாக தொடர்ந்து வருகிறது.
மாறாக என்ஓசி கொடுப்பதற்கு 2 டி நிறுவனம் 20 கோடிகள் வரை கேட்கின்றனராம். அதை கொடுப்பதற்கு கூட இப்பொழுது புறநானூறு படத்தை தயாரிக்கவிற்கும் தான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாராக இருக்கிறது. ஆனால் இந்த பிரச்சனை முட்டி மோதி கிடப்பில் கிடக்கிறது.
புறநானூறு படத்திற்கு புது ஆர்டிஸ்ட்கள் கமிட்டான போதிலும் இந்த என்ஓசி பிரச்சனையால் அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்க முடியாமல் திக்கு முக்காடி வருகிறது டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இதனால் சுதா கொங்காரா என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.