சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

என் வேலையை பார்க்க விடுங்க.. டென்ஷனில் எல்லாத்தையும் விட்டு விலகி சரணடைந்த சூர்யா

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரள விட்ட சூர்யா, தனது 41-வது படமான வணங்கான் படத்தை முடிக்க முடியாமல் பாலாவிடம் மாட்டிக்கொண்டு திணறி வருகிறார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

மீனவர் சமூகத்தை மையமாக வைத்து உருவாகிக்கொண்டிருக்கும் இந்த படத்தில் சூர்யாவிற்கு கதாநாயகியாக கிரித்தி ஷெட்டி நடிக்க, சூர்யாவின் தங்கை கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமீதா பைஜூ நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது

இந்தப் படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இதற்கிடையில் சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் நடிக்க ரெடி ஆகிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் நீண்ட நாட்கள் இழுபறியில் சென்று கொண்டிருக்கும் பாலாவின் வணங்கான் படத்தை முடித்துவிடலாம் என சூர்யா நினைக்கிறார்.

ஆனால் ஆரம்பத்திலிருந்தே இருவருக்கும் பாலா மற்றும் சூர்யாவுக்கும் இடையே கருத்து மோதல் என பல பிரச்சினைகள் வந்த வண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. படத்தின் இயக்குனரான பாலா வணங்கான் படத்தின் கதையை இன்னும் எழுதி முடிக்கவில்லை.

அதற்குள் இந்த படத்தை எடுக்க ஆரம்பித்துவிட்டார் . இப்பொழுது ஒரு முடிவு எடுத்த சூர்யா, ‘நீங்கள் போய் கதையை எழுதி விட்டு வாருங்கள். எவ்வளவு வருடங்கள் வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் உச்சகட்ட டென்ஷன் அடைந்த சூர்யா, ‘நான் சிறுத்தை சிவா படத்தை முடித்து விடுகிறேன். அதன் பிறகு உங்களது கதை தயாரானால் வணங்கான் படத்தின் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்’ என பாலாவிடம் காட்டமாக பேசியிருக்கிறார்.

Trending News