சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பஞ்சாப் நடிகைக்கு வலை போட்ட சூர்யா.. படாதபாடு படப்போகும் சிறுத்தை சிவா

விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து பாலா இயக்கத்தில் சூர்யா வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணங்கான் படத்தை முடித்துவிட்டு சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல வருடமாக பேச்சுவார்த்தைகளில் இருந்த சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் படம் அமைய உள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயின் பற்றி முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. சமீபகாலமாக சூர்யா மற்ற மொழி நடிகைகளுடன் நடித்து வருகிறார் என்ற கூறப்பட்டு வருகிறது. அதற்கேற்றார்போல் எதற்கும் துணிந்தவன் படத்தில் பிரியங்கா அருள்மோகன் நடித்திருந்தார்.

அதேபோல் தற்போது சூர்யா நடித்து வரும் வணங்கான் படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்த வருகிறார். இந்நிலையில் தற்போது சிறுத்தை சிவாவுடன் சூர்யா இணையும் படத்தில் பஞ்சாப் நடிகை மஹிரா ஷர்மா நடிக்கயுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பல படங்களில் இவர் கவர்ச்சி நடிகையாக வலம் வந்துள்ளார்.

பெரும்பாலும் ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும், பாலிவுட்டில் சல்மான்கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 13 வது சீசனில் மஹிரா ஷர்மா போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் தெரியாத இந்த நடிகையை வைத்து சிறுத்தை சிவா படத்தை எடுப்பதற்குள் படாதபாடுபட்டுவிடுவார்.

இந்நிலையில் மஹீரா ஷர்மா முதல்முறையாக தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கயுள்ளார். இதனால் தொடர்ந்து தெலுங்கு நடிகைகளுடன் நடித்து வந்த சூர்யா தற்போது பாலிவுட் நடிகையுடன் நடிக்கயுள்ளார். இதனால் கோலிவுட் நடிகைகள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர்.

Trending News