புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சினிமாவைத் தாண்டி 300 கோடி சம்பாதிக்கும் சூர்யா.. போட்டி போட்டு கல்லா கட்டும் அண்ணன், தம்பி

சூர்யா நடிப்பதற்கு முன்பு கோயம்புத்தூரில் சொந்தக்காலில் நின்று பல வெற்றிகளை பெற்றுள்ளார். ஆரம்பத்தில் இவர் கார்மென்ட் பிசினஸில் கொடிகட்டிப் பறந்துள்ளார். பிசினசை ஒருகை பார்த்ததும், தந்தை வழியில் சினிமாவையும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று நடிக்க வந்தவர் தான் சூர்யா

இப்பொழுது அறம் அறக்கட்டளை பவுண்டேஷன் என பல நல்ல விஷயங்களை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார். இந்த அறக்கட்டளை மூலமாக பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்தும் வருகிறார்.

Also Read: அண்ணாத்த ஸ்டைலில் அடுத்த சூர்யா படம்

சினிமா சூட்டிங் இல்லாத நேரத்தில் அடிக்கடி மும்பை பறந்து விடுகிறார். மும்பையில் மட்டும் கிட்டத்தட்ட இருநூறு கோடி ரூபாய்க்கு மேல் பிசினஸில் இன்வெஸ்ட்மெண்ட் செய்துள்ளார். அதை நிர்வகிக்கும் பொருட்டு தான் இவர் அடிக்கடி மும்பை செல்கிறாராம்.

மும்பையில் இவர் செய்துள்ள இன்வெஸ்ட்மெண்ட் காரணமாக மாதம் 20 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வருகிறதாம். அங்கே பல கமர்சியல் மல்டிபிளெக்ஸ் காம்ப்ளெக்ஸ் வைத்துள்ளார், அதன் காரணமாகவும் கோடிக்கணக்கில் மாதம் தோறும் கல்லா கட்டி வருகிறார். சிங்கம் படத்தில், 500000 ரூபாய் இருந்தால் சூப்பர் மார்க்கெட் வைப்பேன் என்ற வசனத்திற்கு ஏற்ப உண்மையில் தொழில் தொடங்கி லாபம் ஈட்டி வருகிறார்.

Also Read: இப்படி ஒரு மட்டமான வெற்றி தேவையா.? விருமன் படக்குழுவை கண்டபடி பேசிய பயில்வான்

இவரைப் பார்த்து தம்பி கார்த்தியும், அண்ணன் தொழிலில் இன்வெஸ்ட்மெண்ட் செய்துள்ளார். அவரும் மாதம் 5 கோடி ரூபாய் வரை லாபம் பார்க்கிறாராம். ஆக பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அண்ணன், தம்பி இருவருக்கும் வரும் வருமானத்தில் பஞ்சம் இருக்காது என்பது உறுதி.

சினிமாவைத் தாண்டி சூர்யா கிட்ட தட்ட வருடத்திற்கு 300 கோடிக்கு மேல் சம்பாதித்து வருகிறாராம். இதைக் கேட்ட கோலிவுட் வட்டாரம் வாயைப் பிளந்து பார்க்கிறது.

Also Read: எம்ஜிஆர் பாணியை ஃபாலோ பண்ணும் சூர்யா, கார்த்தி.. வியக்க வைத்த சிவகுமாரின் குடும்பம்

Trending News