வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

என்ன பண்ணாலும் சூர்யா விஜய் மாதிரி வர முடியாது.. சிவக்குமார் குடும்பமே இப்படித்தானா?

Surya: பொழுதுபோக்கிற்காக சினிமாவை பார்த்த காலம் மாறி, தற்போது சினிமாவை பார்ப்பது மட்டும்தான் பொழுதுபோக்கு என்பதற்கு ஏற்ப நிலைமை வந்துவிட்டது. அந்த வகையில் என்ன படங்கள், யார் நடித்த படங்கள் என்று தெரியாத அளவிற்கு எக்கச்சக்கமான படங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் அந்த படங்களில் கதை இருக்கோ இல்லையோ ஒரு மாசாக இருந்து விட்டால் உடனே ஹிட் ஆகி விடுகிறது.

அது மட்டும் இல்லாமல் அந்த படங்களில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற ஹீரோக்கள் கமிட் ஆகிவிட்டால் அப்படத்திற்கு ஏகபோக வரவேற்புகளை வைத்து விடுகிறார்கள். இதற்கு இடையில் சூர்யா மட்டும் சற்று வித்தியாசமான முறையில் கதையை தேர்வு செய்து வந்திருக்கிறார்.

அதாவது சூர்யா சினிமாவிற்குள் நுழைந்த பொழுது நடிப்பு சுத்தமா இவருக்கு வரமாட்டுக்கு என்று பல விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டது. அதெல்லாம் தாண்டி தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறிவிட்டார். இந்த இடத்தை பிடிப்பதற்கு அந்த அளவிற்கு கஷ்டப்பட்டு போராடி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் சூர்யாவிடம் இயக்குனர்கள் கதை சொல்ல வந்தால் ஒட்டுமொத்த குடும்பத்தின் முன்னணியில் வைத்து தான் கதையே கேட்பாராம்.

Also read: வளர்த்து விட்ட 5 இயக்குனர்களை தூக்கி எறிந்த சூரியா.. சாப்பிட்டு கை கழுவுவதற்குள் நன்றி மறக்கும் சினிமா

சூர்யாவுக்கும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் அந்த கதை பிடித்து போனால் மட்டும்தான் ஓகே சொல்வாராம். அது மட்டுமில்லாமல் 30 சொந்தக்காரர்களையும் காசு கொடுத்து கூப்பிட்டு அவங்களையும் கதையை கேட்க வைப்பாராம். அதன் பிறகு தான் அந்த இயக்குனர்களுக்கு ஓகே சொல்லி நடித்துக் கொடுப்பார். பிறகு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தும் பெருசாக வெற்றி கொடுக்க முடியவில்லை என்று யோசித்து சமீப காலமாக வேற ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணி வருகிறார்.

அதாவது பிரபல ரைட்டரை வரவழைத்து அவர் முன்னணியில் கதையை கேட்டிருக்கிறார். பிறகு அவர் இந்த கதை நன்றாக இருக்கு, நீங்கள் நடித்தால் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொன்னதுக்கு பிறகு தான் சூர்யா படத்தை நடித்து வருகிறார். அதே மாதிரி சமீபத்தில் வந்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி வாகை சூடி விருது வாங்கும் அளவிற்கு போய் இருக்கிறது.

இதனை தொடர்ந்து இதே மாதிரியே செய்யலாம் என்று முடிவு பண்ணி விட்டார். ஆனாலும் இவர் என்ன பண்ணினாலும் அஜித் மற்றும் விஜய் ரேஞ்சுக்கு வர முடியாது என்று பலரும் சூர்யாவை கிண்டல் அடித்து வருகிறார்கள். இதுல சூர்யா மட்டும்தான் இப்படியா இல்ல சிவக்குமார் குடும்பமே இப்படித்தான் செய்து வருகிறார்களா என்று தெரியவில்லை.

Also read: மொத்தமாக பாலிவுட் பக்கம் சாய்ந்த சூர்யா.. ஹிந்தி சூரரைப் போற்று படத்தில் செஞ்ச சம்பவம்

Trending News