Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

Suriya : சூர்யாவின் மகள் தியா 12ஆம் வகுப்பில் எடுத்த மொத்த மதிப்பெண்.. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா!

Suriya : சூர்யாவின் மகள் தியா 12ஆம் வகுப்பில் எடுத்த மொத்த மதிப்பெண்.. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா!

நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தேவ் ஓவியம் மற்றும் கராத்தே ஆகியவற்றை மிகுந்த ஆர்வம் உடையவர். மேலும் சூர்யாவின் […]

நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தேவ் ஓவியம் மற்றும் கராத்தே ஆகியவற்றை மிகுந்த ஆர்வம் உடையவர்.

மேலும் சூர்யாவின் மகள் தியா படிப்பில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர். சமீபத்தில் கூட ஜோதிகாவை அரசியலுக்கு வருவீர்களா என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு இப்போது தன்னுடைய குழந்தைகள் போர்டு எக்ஸாம் எழுதி வருகிறார்கள்.

அவர்களைப் பார்த்துக் கொள்வது தான் இப்போதைக்கு என்னுடைய வேலை என்று கூறியிருந்தார். தனது மகன் மற்றும் மகள் இருவருக்குமே படிப்பு மற்றும் மற்ற விஷயங்களை ஜோதிகா கற்று கொடுத்து வருகிறார். அந்த வகையில் தியாவின் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் இப்போது வெளியாகி இருக்கிறது.

பன்னிரெண்டாம் வகுப்பில் சூர்யாவின் மகள் தியா எடுத்த மதிப்பெண்

பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் 99, மொழிப்பாடத்தில் 95, கணிதத்தில் 100, அறிவியலில் 98 மற்றும் சமூக அறிவியலில் 95 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மொத்தம் 500 க்கு 487 மதிப்பெண் எடுத்திருந்தார். இப்போது 12-ம் வகுப்பிலும் அசத்தி இருக்கிறார்.

அதாவது மொத்தம் 600 க்கு 581 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். தமிழில் 96, ஆங்கிலத்தில் 97, கணிதத்தில் 94, இயற்பியலில் 99, வேதியலில் 98 மற்றும் கணினியில் 97 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கு ஏற்ப தியா மதிப்பெண்களை குவித்து இருக்கிறார்.

இப்போது குழந்தைகளுக்காக ஜோதிகா மும்பை சென்றிருக்கிறார். மேலும் அதிக மதிப்பெண் தியா பெற்றுள்ளதால் அடுத்து என்ன படிக்கப் போகிறார் என்ற தகவலும் விரைவில் வெளியாக வாய்ப்பிருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.