திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சூர்யா இடத்தைப் பிடித்த கவின்.. ஸ்டார் அந்தஸ்தை உயர வைக்க வரும் பார்ட் 2

Kavin: கவின் தான் அடுத்த தளபதி, அடுத்த சிவகார்த்திகேயன் என்ற அலப்பறை சோசியல் மீடியாவில் அதிகமாக இருக்கிறது. லிப்ட், டாடா வரிசையில் சமீபத்தில் வந்த ஸ்டார் படமும் அவருக்கான அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது.

அதை அடுத்து தற்போது அவரின் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. இது இல்லாமல் இன்னும் சில இயக்குனர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சூர்யா இடத்தை இவர் பிடிக்கப் போவதாக அவரின் ரசிகர்கள் அலப்பறை கொடுத்து வருகின்றனர். இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ஏனென்றால் சில்லுனு ஒரு காதல் பார்ட் 2 வர இருக்கிறது.

அடுத்த சூர்யாவாக மாறும் கவின்

சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் வெளிவந்த படம் அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த பாகம் வர உள்ளது.

Suriya
Kavin
Vijay
Sivakathikeyan
Jyothika

முந்தைய பாகத்தை இயக்கிய ஒபிலி என் கிருஷ்ணா தான் இந்த பாகத்தையும் இயக்குகிறார். கடைசியாக இவர் சிம்புவை வைத்து பத்து தல படத்தை இயக்கியிருந்தார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தான் கவின் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். சூர்யா, ஜோதிகா இருவருமே தற்போது நடிப்பில் படு பிஸியாக இருக்கின்றனர்.

அதனாலேயே தற்போது பிரஷ்ஷான ஒரு ஜோடியை வைத்து படத்தை எடுக்க இயக்குனர் திட்டமிட்டு இருக்கிறார். முழுக்க முழுக்க காதல் ரொமான்ஸ் கலந்து எடுக்கப்பட இருக்கும் இந்த கதை அவருக்கு நிச்சயம் செட் ஆகும்.

இதன் மூலம் அவர் தன்னுடைய ஸ்டார் அந்தஸ்தையும் உயர்த்தி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த தகவல் கவின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

ஸ்டார் அந்தஸ்தை பெறும் கவின்

Trending News