வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய், அஜித் வாரிசுகளுக்கு போட்டியான குட்டி சூர்யா.. ஜோவை உரித்து வைத்திருக்கும் தியாவின் வைரல் போட்டோ

Vijay-Ajith-Surya: டாப் ஹீரோக்களின் வாரிசுகள் தான் இப்போது சோஷியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது விஜய் மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யாவின் போட்டோக்கள் அல்லது வீடியோக்கள் வெளிவந்து ட்ரெண்டாகும். ஆனால் சமீப காலமாக அஜித் பிள்ளைகளின் போட்டோக்கள் தான் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அதில் அவருடைய மகள் அனோஷ்கா அம்மா ஷாலினியை மிஞ்சும் அளவுக்கு இருப்பதால் எப்போது நடிக்க வருவார் என்று ஆவலும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதேபோல் குட்டி அஜித் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போட்டோக்களும் மீடியாவில் வெகு பிரபலம்.

இந்நிலையில் தற்போது அவர்களுக்கு போட்டியாக குட்டி சூர்யாவின் போட்டோவும் வெளியாகி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. நடிப்பை தாண்டி பிசினஸில் அதிக கவனம் செலுத்தி வரும் சூர்யா சென்னை சிங்கம்ஸ் அணியை வாங்கி இருக்கிறார்.

Also read: விஜய்க்கே நோ சொன்னவரை துரத்தும் தயாரிப்பாளர்.. தொடர் ஃப்ளாப்பால் படும் பாடு

நேற்று ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் தொடக்க விழா மும்பையில் நடைபெற்றது. அதை கண்டு களிப்பதற்காக சூர்யாவின் மகன் மற்றும் மகளும் வந்திருந்தார்கள். அப்போது சூர்யா பேட்டிங் செய்ய சச்சின் பால் போட என பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தது.

சுரேஷ் ரெய்னாவுடன் தியா, தேவ்

surya-dev-diya
surya-dev-diya

அவை அனைத்தும் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் தியா, தேவ் ஆகியோர் சுரேஷ் ரெய்னாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோவும் பலரையும் கவர்ந்துள்ளது. அதில் தியா அச்சு அசல் ஜோதிகாவின் ஜாடையில் இருக்கிறார். அதேபோல் தேவ் சூர்யாவை சிறுவயதில் பார்த்தது போல் இருக்கிறார்.

இரு பிள்ளைகளும் கண்மூடி திறக்கும் நேரத்தில் நெடு நெடுவென வளர்ந்திருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. படிப்பை தாண்டி விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வரும் தியா, தேவ் அப்பா அம்மாவைப் போல் நடிக்க வருவார்களா என்ற கேள்வியையும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Also read: மக்கள் பணின்னா இப்படித்தான் இருக்கணும்.. ஆட்சியை பிடிக்கும் முன்பே ஆட்டம் காண வைக்கும் விஜய் வெற்றிக் கழகம்

Trending News