Sooriyavamsam: தமிழ் சினிமா ஒட்டுமொத்த பந்தயக்களம் என்பது அஜித் மற்றும் விஜய் சுற்றி தான் இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 20 வருடங்களுக்கு முன்பு வந்த சூரியவம்சம் படம் செஞ்ச சாதனையை இணையவாசிகள் இப்போது வைரல் ஆக்கி வருகிறார்கள்.
இந்த படத்தில் இடம் பெற்ற நட்சத்திர ஜன்னலில் பாடல் இன்று வரை மோட்டிவேஷன் பாட்டாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார்.
சூர்யவம்சம் படம் செஞ்ச சாதனை தெரியுமா?
அதாவது தமிழ்நாட்டில் இதுவரை ரிலீசான படங்களில் சூரியவம்சம் படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த மக்கள் கூட்டம் தான் அதிகமாம்.
அதே மாதிரி சின்ன திரையில் ஒளிபரப்பான படங்களில் அதிக டிஆர்பி பெற்ற படம் சூரிய வம்சம் தான். அதனால் தான் சன் டிவியில் மாசத்துக்கு ஒரு தடவை இந்த படத்தை போட்டு விடுகிறார்கள்.
அதே மாதிரி யூட்யூபில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் இதுவரை 70 கோடி பேர் இந்த படத்தை பார்த்து இருக்கிறார்கள்.
இவ்வளவு சாதனை படைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஆரம்பித்தால் மக்கள் பெரிய அளவில் தங்கள் எதிர்பார்ப்புகளை உருவாக்கி விடுவார்கள்.
அப்படி ஒரு எதிர்பார்ப்புகளுக்கு நடுவே படம் பண்ணும் சூழ்நிலையில் நான் இல்லை என விக்ரமன் சொல்லி இருக்கிறார்.