வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஜோசப் விஜய் யாருன்னு பதிலடி கொடுத்த எஸ்வி சேகர்.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு!

70-களில் இயக்குனராகவும் நடிகராகவும் தன்னுடைய படங்களில் நகைச்சுவைக்காக அறியப்பட்டாலும், அவற்றில் தொனிக்கும் நெருடலான இரட்டை அர்த்தங்களுக்காக விமர்சிக்கப்பட்டவர் எஸ் வி சேகர். சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்ட இவர், பல ஆண்டுகளாக இருந்த கட்சியின் செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கியுள்ளார்.

குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவாக கருத்து பதிவிட்ட விவகாரத்தில் எஸ் வி சேகர் மீது காட்டமான விமர்சனங்கள் வந்தது. இருப்பினும் கடைசி வரை கைது செய்யப்படவில்லை என்றாலும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதாக கூறிய பின்னரே அவர் குறித்த பரபரப்பு சற்று ஓய்ந்தது. இதுவும் நடிகர் எஸ் வி சேகர் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

Also Read: லண்டனில் இருந்து வெளிவரும் ஏகே-62 அப்டேட்.. லியோவால் பதுங்கிய அஜித் பாயும் நேரம் இது

இந்த நிலையில் பொசுக்குன்னு இப்படி மாறிட்டாரு என ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் எஸ் வி சேகர் விஜய்க்கு ஆதரவாக பேசி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஏனென்றால் ஷாருக்கான் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு ஹிட் கொடுத்த பதான் படத்தின் மீதும், விஜய்யின் லியோ படத்தின் மீதும் மத ரீதியாக ஒரு சில விமர்சனங்கள் எழுகிறது.

ஏனென்றால் பதான் படத்தில் காவி நிறத்தை தவறாக சித்தரித்ததாகவும், விஜய்யின் லியோ படத்தில் சிலுவை அடையாளத்தை முன்னிலைப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் ஷாருக்கான் பிறந்ததில் இருந்தே முஸ்லிம்தான். திடீரென்று அவர் முஸ்லிமாகவில்லை. அதனால் இந்துக்களை அசிங்கப்படுத்துகிறார் என சொன்னால் ஒத்துக்கொள்ள முடியாது. அதை போல் கிறிஸ்தவரான ஜோசப் விஜய் பல படங்களில் திருநீர் இட்டு, கையில் சூலத்துடன் ஆடிய போதெல்லாம் எந்த கிறிஸ்தவர்களும் விஜய்க்கு எதிராக போர் கொடி தூக்கவில்லை.

Also Read: லோகேஷ்சை விஜய் படுத்தும் பாடு.. தளபதி காட்டும் ஆர்வத்தால் காஷ்மீரில் நடக்கும் கலவரம்

அப்போதெல்லாம் இனிச்ச ஜோசப் விஜய் இப்போது லியோ படத்தில் சிலுவையை காண்பித்தவுடன் அவரைப் பற்றிய தவறான விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறாக குவிகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்ததாக விஜய் தான். அவர் மிக சிறந்த என்டர்டைனர். அவருக்கு அரசியல் பேச வேண்டிய அவசியமே இல்லை. விஜய் எந்த இடத்தில் பப்ளிக்காக ஒரு மதத்திற்கு எதிராக பேசினார்.

இந்தியா என்பது சகிப்புத்தன்மை மிக்க ஒரு நாடு. இந்தியா பலவிதத்தில் பிரிந்து இருந்தாலும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு நாடு. உலகத்தில் வேறு எந்த நாடும் இந்தியா போய் கிடையாது. அப்படிப்பட்ட நாட்டிற்குள் முட்டாள்தனமாக சிலர் மதத்தை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர் என எஸ் வி சேகர் மத்தியில் ஆளும் கட்சியை குறி வைத்து காட்டமாக விமர்சித்திருக்கிறார். இவருடைய பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுவது மட்டுமல்லாமல் எஸ் வி சேகரின் இந்த திடீர் மாற்றத்தில் ஏதாவது உள்நோக்கம் இருக்குமோ என்றும் யோசிக்க தோன்றுகிறது.

Also Read: ஆஸ்கார் இல்ல, பாஸ்கர் விருது கூட கிடைக்காது.. பதான் புகட்டிய பாடம்! கிழித்து தொங்க விட்ட பிரகாஷ்ராஜ்

Trending News