புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரஜினியின் போன் காலை எடுக்க மறுத்த டிஆர்.. சூப்பர் ஸ்டாரானவுடன் அடித்த அந்தர்பல்டி

Rajini : இப்போது டிஆர் ட்ரோல் செய்பவராக பார்க்கப்பட்டால் அந்த காலத்தில் டெரராக இருப்பாராம். டி ராஜேந்தருக்கு சின்னதாக ஏதாவது செய்தாலே சற்றென்று கோபம் வந்து விடுமாம். அப்படி ரஜினியின் போன் காலையே ஒரு முறை கோபப்பட்டு எடுக்க மறுத்திருக்கிறார் டிஆர்.

அதாவது ரஜினிக்கு உடம்பு சரி இல்லை என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டு இருந்துள்ளது. சக நடிகர் என்பதால் அவர் உடல் நலத்தை பற்றி விசாரிக்க தனது பிஏ இடம் ரஜினிக்கு போன் போட சொல்லி இருக்கிறார்.

ரஜினியின் மேனேஜர் ஃபோன் காலை எடுத்துள்ளார். உண்மையாகவே டிஆர் தான் அழைத்துள்ளாரா என்பது மேனேஜர் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ரஜினி வீட்டுக்கு அடிக்கடி இதே போன்று ரசிகர்களிடம் கால் வருவதால் நம்பரை வாங்கிக் கொண்டு பிறகு கூப்பிடுகிறேன் என்று கூறிவிட்டார்.

ரஜினி மீது கோபப்பட்ட டி ராஜேந்தர்

அது டிஆர் நம்பர் தான் என்பது தெரிந்துவிட்டது. அந்த சமயத்தில் ரஜினி ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்துள்ளார். முதலில் ஏவிஎம் சரவணன் டி ஆர்-க்கு போன் செய்துள்ளார். ஏவிஎம் சரவணன் உங்களிடம் பேச வேண்டுமாம் என டிஆர் இடம் மேனேஜர் ஃபோன் கொடுத்துள்ளார்.

ஏவிஎம் சரவணன் என நினைத்துக் கொண்டு டிஆர் சொல்லுங்க சார் என்றவுடன் ரஜினியிடம் சரவணன் போன் கொடுத்து விட்டார். நான் ரஜினி பேசுறேன் என்று சொன்னவுடன் டிஆருக்கு கோபம் வந்துவிட்டதாம். எதுக்கு ஏவிஎம் ஸ்டுடியோன்னு சொல்லிட்டு ரஜினி வீட்டில் இருந்து போன் வரணும் என்று கோபப்பட்டு உள்ளார்.

இதெல்லாம் எனக்கு பிடிக்காது ரஜினி என திட்டி விட்டு ஃபோனை கட் செய்து விட்டாராம். பிறகு நாலைந்து முறை போன் வந்தும் டி ஆர் எடுக்கவில்லையாம். அதன் பிறகு சமாதானமாகி ரஜினியுடன் டிஆர் பேசி உள்ளார். ஆனால் பின் நாட்களில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துக்கு ரஜினி வந்துவிட்டார்.

அப்போது சிம்பு மற்றும் ஐஸ்வர்யா ரஜினி இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்தது. அப்போது டிஆர் ஒருவரிடம் போனில் நான் யாரு தெரியுமா சூப்பர் ஸ்டார் சம்மந்தி என பெருமையுடன் பேசினாராம். இவ்வாறு ரஜினி பெரிய நிலைமைக்கு வந்தவுடன் டிஆர் அந்தர்பல்டி அடித்து பேசி உள்ளார்.

ரஜினி மீது ஒரு போன் காலுக்காக கோபப்பட்ட டிஆர் அவரின் சம்பதியாக ஆசைப்பட்டார் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார். சில காரணங்களினால் சிம்பு மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் திருமணம் நடக்காமல் போனது.

Trending News