புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விரைவில் சினிமாவை விட்டு விலகுவேன்.. தனுஷ் பட நடிகை அதிர்ச்சித் தகவல்

தமிழ் படங்களில் நடித்து மிகக் குறுகிய காலங்களில் அதிக ரசிகர்கள் பெற்ற தனுஷ் பட நடிகை திடீரென சினிமாவில் இருந்து விலகப் போவதாக அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார். இவருடைய தோற்றமும், நிறமும் பல ரசிகர்களை கவர செய்தது.

சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளவர் ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த டாப்ஸி. இதைத்தொடர்ந்து காஞ்சனா 2, வை ராஜா வை, ஆரம்பம் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். டாப்சி ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்போது ஹிந்தி மொழி படங்களிலும் டாப்ஸி நடித்து வருகிறார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆக இருந்த மித்தாலி ராஜின் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மித்தாலி ராஜவாக டாப்ஸி நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டாப்சிக்கு பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதில் முக்கியமாக உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் சினிமாவில் நடிக்க ஆசை இருக்கிறதா என ஒருவர் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த டாப்ஸி வாழ்நாள் முழுவதும் சினிமாவில் நடிக்க எனக்கு ஆசை இல்லை. போதுமான அளவு பணம் சம்பாதித்து விட்டு சீக்கிரமாகவே சினிமாவை விட்டு விலகி விடுவேன் என கூறியுள்ளார். ஏனென்றால் சினிமாவில் சீக்கிரமாகவே சம்பாதித்து விடலாம் என்ற நோக்கில்தான் இதைத் தேர்ந்தெடுத்தேன் என டாப்சி கூறியுள்ளார்.

மேலும், ஆடம்பரமான வாழ்க்கை எனக்கு பிடிக்காது, ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் ஒன்றுக்கு பத்து முறை யோசித்து தான் வாங்குவேன் என டாப்ஸி கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது சினிமாவை விட்டு விலகப் போவதாக கூறியதால் அவரது ரசிகர்கள் மிகுந்த அதிருச்சியிலும், கவலையிலும் உள்ளனர்.

Trending News