Mathagam teaser image

ஒரே இரவில் என்ன வேணாலும் நடக்கலாம்.. ஜெய் பீம் மணிகண்டன்-அதர்வா கூட்டணியில் உருவான மத்தகம் டீசர்

Mathagam Teaser: சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் குட் நைட். இந்த படத்தில் ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்திருந்த மணிகண்டன் ஹீரோவாக நடித்திருக்கிறார். குட் நைட் திரைப்படத்தின் வரவேற்பிற்கு பிறகு இவரும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவில் ஒருவராக ஆகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இவர் நடித்த வெப் சீரிஸ் டீசர் வெளியாகி இருக்கிறது.

மத்தகம் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த வெப் சீரிஸில் நடிகர் அதர்வா முரளியும் நடித்திருக்கிறார். இதுதான் அவர் முதன் முதலில் நடிக்கும் வெப் தொடராகும். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில், நேற்று டீசர் வெளியாகி இருக்கிறது. அதர்வா மற்றும் மணிகண்டன் இருவரும் இந்த டீசரில் பயங்கரமாக மிரட்டி இருக்கிறார்கள்.

யானையின் நெற்றி பகுதியை தான் மத்தகம் என்று சொல்வார்கள். அதற்கு ஏற்றது போல் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அதர்வா மற்றும் மணிகண்டன் இருவரின் முகத்திற்கு பின்னால் யானை இருப்பது போல் தான் வெளியிடப்பட்டிருந்தது. இந்த சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்த சீரிஸை ரிலீஸ் செய்கிறது.

மத்தகம் டீசர் தொடங்கும் பொழுதே ஒரு இரவில் என்னவெல்லாம் நடக்கும் என்ற கேள்வியுடன் தொடங்குகிறது. முப்பது மணி நேரத்திற்குள் நடக்கும் விஷயங்களை மையமாகக் கொண்டு இந்த சீரிஸ் வெளியாக இருக்கிறது. இந்த 30 மணி நேரத்திற்குள் ஹீரோ மற்றும் வில்லனுக்கு இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் இதன் திரைக்கதை என்று சொல்கிறார்கள்.

அதர்வா முரளி மற்றும் மணிகண்டன் இருவரும் ஒருவருக்கொருவர் நடிப்பில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது. சசிகுமாரின் கிடாரி படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் முருகேசன் தான் இந்த வெப் தொடரை இயக்கியிருக்கிறார் மேலும் இதில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நிகிலா விமல், திவ்யதர்ஷினி, இளவரசு, வடிவுக்கரசி, மூணார் ரமேஷ் ஆகியோர் நடித்திருக்கிண்டனர்.

நடிகர் மணிகண்டனுக்கு ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்களிடம் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருப்பதால் இந்த சீரிசை அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அதர்வா முரளிக்கு சமீப காலமாக வெற்றி படங்கள் எதுவுமே இல்லாத காரணத்தால் அவருக்கும் இது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து இருக்கும் தொடராகும். 

simbu-4

பணத்திமிரால் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்த 6 நடிகர்கள்.. இஷ்டத்திற்கு காதலித்து அடங்கிப் போன சிம்பு

சினிமாவில் இருக்கும் 6 நடிகர்கள் தீராத விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்துள்ளனர்

Siddharth

நிஜ வாழ்க்கையிலும் பிளேபாயாகவே சுற்றி திரியும் 6 நடிகர்கள்.. முன்னணி ஹீரோயின்களை கழட்டிவிட்ட சித்தார்த்

நடிகை ஸ்ரீரெட்டி தன்னை ஏமாற்றிய நடிகர்களின் லிஸ்டில் விஷாலையும் சேர்த்து சொன்னார்.

atharva-sj-surya

எஸ் ஜே சூர்யா இயக்குனருடன் கூட்டணி வைக்கும் அதர்வா.. அடுத்த படத்திற்கான பிள்ளையார் சுழி

அதர்வா, முதல் படத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் வெற்றி தோல்வியை சந்தித்து வருகிறார்.

vijay

புகழ் போதையில் அடாவடியாய் கேரியரை தொலைத்த 5 நடிகர்கள்.. முதலிடம் நம்ம விஜய் தம்பிக்கு தான்

பேரும் புகழுடன்உச்சத்தில் இருந்தபோது தலைகால் புரியாமல் தெனாவட்டில் ஆடியதால் 5 நடிகர்கள் தங்களது கேரியரை நாசமாக்கிக் கொண்டனர்.

aadharva

பணத்தை ஆட்டையை போட்டு தயாரிப்பாளர்களை ஏமாற்றிய 5 நடிகர்கள்.. கேரியருக்கு ஆப்பு

தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு படப்பிடிப்புக்கு வராமல் டேக்கா கொடுத்த 5 நடிகர்களின் கேரிருக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆப்பு வைத்து விட்டது.

jai-bhim-manikandan

நல்ல திறமை இருந்தும் வாயால் அழிந்த 5 இளம் நடிகர்கள்.. 2 கோடிக்கு வலை விரிக்கும் ஜெய் பீம் மணிகண்டன்

சினிமாவில் வளர முடியாமல் திணறும் 5 இளம் நடிகர்கள் நல்ல திறமை இருந்தும் தங்கள் வாயால் கெட்டுப் போய் உள்ளனர்.

vijay-sethupathy-trisha

வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு சோகமாக முடிந்த 5 படங்கள்.. தியேட்டரில் கடைசி வரை ஏங்க வைத்த ராம்-ஜானு

இப்படி சோகமான முடிவோடு வந்த இந்த படங்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல படங்கள் நம்மை துக்கத்தில் ஆழ்த்தும் வகையில் வெளிவந்திருக்கிறது.

தயாரிப்பாளர்களை மண்ணைக் கவ்வ வைத்த 6 நடிகர்கள்.. இருக்கிறதை விட்டு பறக்க ஆசைப்பட்ட ஆதி, ஜீவி

சில நடிகர்களின் படங்கள் என்றாலே நஷ்டத்தை ஏற்படுத்தும் விதமாக சில படங்கள் அவர்களுக்கு அமைத்திருக்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாமல் தவித்து இருக்கிறார்கள்.

Rajinikanth

போதாது போதாது என சம்பாதித்ததை மொத்தமாக தொலைத்த 5 நடிகர்கள்.. தனக்குத்தானே குழி வெட்டிய ரஜினி

சம்பாதித்த பணம் போதாது என்று, தயாரிப்பில் மொத்தம் பணத்தையும் போட்டு நஷ்டம் ஏற்பட்ட நடிகர்கள்.

ashok-selvan

ஒரே ஒரு வெற்றிக்காக போராடும் 5 ஹீரோக்கள்.. அடல்ட் கண்டன்ட் நடிச்சும் வேலைக்கு ஆகாத அசோக் செல்வன்

நிறைய ஹீரோக்கள் பல வருடங்களாக ஒரு வெற்றி படத்திற்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மாவீரன் ரிலீசுக்கு முன்பே அடுத்த படத்தில் கமிட்டான அதிதி.. வாரிசு நடிகருக்கு ஜோடியாக அதிக சம்பளம்

அதிதி ஷங்கர் மாவீரன் படத்தின் ரிலீசுக்கு முன்பே வாரிசு நடிகர் ஒவ்வொருவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளார்.

நல்ல ஒரு அந்தஸ்து இருந்தும் சினிமாவில் தோற்ற 6 இளசுகள்.. காணாமல் போன அஜித் தம்பி

அடுத்து எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் தெலுங்கு பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனாலும் அதில் வெற்றி பெற முடியாமல் இறுதிப் போட்டியாளராக வந்தார்.

வயிறு குலுங்க சிரிக்க வைத்த டி.பி.கஜேந்திரன் நடித்த 6 படங்கள்.. குள்ள சினேகாவின் தந்தையாக அடித்த லூட்டி

மறைந்த இயக்குனர் மற்றும் நடிகர் விசுவிடம் டிபி கஜேந்திரன் அவர்கள் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

சரியான வழிகாட்டி இல்லாமல் தடுமாறி போன 5 நடிகர்கள்.. அப்பாவின் பெயரை கெடுத்துக்கொண்ட அதர்வா

சில நடிகர்கள் சினிமாவில் வந்தாலும் சரியான வழிகாட்டி இல்லாமல் அவர்களின் சினிமா வாழ்க்கையில் தடுமாறி போகும் அளவிற்கு பெயரை கெடுத்துக் கொள்வார்கள்.

5 சேனலில் குடியரசு தின சிறப்பு படங்கள்.. டிஆர்பி-யை ஏற்ற சன் டிவிக்கு டஃப் கொடுக்கும் ஜீ தமிழ்

குடியரசு விழாவை முன்னிட்டு ஐந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரம் வெளியாகி உள்ளது.