Maamannan

விஜய், அஜித் படங்களுக்கு இல்லாத ஓப்பனிங்.. இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட மாமன்னன்!

மாமன்னன் திரைப்படத்தைப் பொறுத்த வரைக்கும் ரிலீஸுக்கு முன்பே படம் மக்களிடையே நல்ல ரீச்சை பெற்றுவிட்டது.

maamannan-vadivelu

Maamannan Movie Review- வடிவேலு என்னும் நடிகனை அடையாளப்படுத்திய மாரி செல்வராஜ்.. மாமன்னன் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

இதுவரை காமெடியனாக பார்த்த அவரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்ப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

maamannan-vadivelu-udhayanidhi

வடிவேலுவின் புதிய பரிமாணம் ஒர்க் அவுட் ஆனதா.? மாமன்னன் எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் பற்றிய கருத்துக்களை ரசிகர்கள் தற்போது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

Raghuvaran

வாழும் ரகுவரனாக சினிமாவுக்கு கிடைத்த ஆக்டர்.. இப்படியெல்லாம் நடிக்க முடியுமா என மிரளவிடும் நடிப்பு அரக்கன்

நடிப்பதற்கு என்று அவதாரம் எடுத்து பிறந்தது போல் நடிப்பின் மீது தீராத காதல் கொண்டு எப்படிப்பட்ட கதாபாத்திரம் கிடைத்தாலும் அதில் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விடுவார்கள்.

Udhayanidhi stalin

சினிமாவுக்கு டாட்டா காட்ட நினைத்த உதயநிதி.. கழுத்தில் கத்தி வைத்த பிரபல நிறுவனம்

உதய்யின் கடைசி படம் என்பதாலேயே மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகமாக இருந்தது.

maamannan-trailer

தேவர்மகன் சாயலில் மாமன்னனாக அவதாரம் எடுத்த வடிவேலு.. எதிர்பார்ப்பை மிரள விட்ட ட்ரெய்லர்

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்த நிலையில் ட்ரெய்லரும் அதை பெருமளவில் தூண்டியிருக்கிறது.

udhayanithi-vadivelu

மாமன்னன் வடிவேலுவால் அப்செட் ஆன உதயநிதி.. பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிய கதை

இதுவரை காமெடியனாக கலக்கி வந்த வடிவேலு இதில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதும் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

bhagat fazzil

வித்தியாசமான நடிப்பால் ஆலமரம் போல் வளர்ந்த 5 நடிகர்கள்.. நம்ம திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்த ஏஜென்ட் அமர்

ஐந்து ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் தங்களுடைய கடின உழைப்பை மட்டுமே நம்பி இன்று ஆலமரம் போல் வளர்ந்து இருக்கிறார்கள்.

mari-selvaraj-maamannan-udhayanidhi-stalin

ஆழமாக அரசியல் பேசும் மாமன்னன்.. கமலுடன் கூட்டணி போடுவாரா உதயநிதி!

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “மாமன்னன்”. இதில் வடிவேலு, ஃபகத் பாசில், லால், கீர்த்திசுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட்ஜெய்ண்ட் மூவிஸ் தயாரிக்கும்

சிறுத்தை போல வேட்டையாட காத்திருக்கும் கமல்.. மலையாள நடிகர் உட்பட 5 பேருக்கு வலை வீசும் உலகநாயகன்

ஐந்து டாப் ஹீரோக்களை தனது தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க வைக்க கமல் முயற்சி செய்து வருகிறார்.

kamal -rajini

தயாரிப்பாளர்களை பெரியளவில் வாழ வைத்த 6 படங்கள்.. கமலை பார்த்து பொறாமை பட்ட ரஜினி

தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்திய ஐந்து படங்கள் இருக்கிறது. ரஜினி, கமலை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது.

வடிவேலுவை தூக்கிவிடும் ரஜினி, கமல்.. ரகசியமாய் நடக்கும் மாஸ்டர் பிளான்

வடிவேலுவை எப்படியாவது தூக்கி விட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் ரகசியமாக மாஸ்டர் பிளான் போட்டு ரஜினி மற்றும் கமல் இருவரும் அந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

rajini-kamal-lokesh

மறுபடியும் அடித்துக் கொள்ளும் ரஜினி கமல் ரசிகர்கள்.. சும்மா கடந்த சங்கை ஊதிவிட்ட லோகேஷ்

பல வருடங்களாக ரஜினி கமல் ரசிகர்கள் பிரச்சினை இல்லாமல் இருந்து வந்த சூழலில் தற்போது மீண்டும் இவர்கள் அடித்துக் கொள்ளும் அளவிற்கு பிரச்சனை பூதாகரமாக வெடித்து வருகிறது.

வைகை புயலை தூக்கிவிடும் இசைப்புயல்.. மாஸாக வந்த மாமன்னன் அப்டேட்

வடிவேலுவின் சினிமா கேரியர் மீண்டும் கேள்விக்குறியாக வாய்ப்பிருந்த நிலையில், அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்பு தான் மாமன்னன்.

ஹீரோவிற்கு நிகராக கவனிக்கப்பட்ட 5 கதாபாத்திரங்கள்.. தியேட்டரில் அனைவரையும் மிரளவிட்ட ‘ஏஜெண்ட் டீனா’

தமிழ் சினிமாவில் இந்த ஐந்து கேரக்டர்கள் ஹீரோவுக்கு நிகராக வெயிட்டான கதாபாத்திரத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

பல கோடி மதிப்பிலான லம்போர்கினி காரை வைத்திருக்கும் 5 சினிமா பிரபலங்கள்.. பைக் போல அதிக கிரஷில் இருக்கும் அஜித்

தற்போது அதிக விற்பனையாகிக் கொண்டிருப்பது லம்போர்கினி கார் தான். இந்த காரை பயன்படுத்தும் சினிமா பிரபலங்கள் பற்றி பார்க்கலாம்.

vadivelu-udhayanithi

உதயநிதி, வடிவேலு காம்போவில் வெளியான மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக்.. துப்பாக்கி, கத்தியுடன் மிரட்டல்

மாமன்னன் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வைகைப்புயல் வடிவேலு ஒரு பாரம்பரிய உடையை அணிந்து கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார். அதே நேரத்தில் உதயநிதி கையில் ஒரு கத்தியுடன் நவீன தோற்றத்தில் இருக்கிறார்.

pushpa-2-allu-arjun

புலியே பயந்து பின்னாடி போனா அது புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்.. புல்லரிக்க வைத்த புஷ்பா 2 க்ளிம்ஸ் வீடியோ

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் இந்த படம் சர்வதேச அளவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் மிரட்டியது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதற்கான சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அது மட்டுமல்ல புஷ்பா 2 படத்தின் புல்லரிக்க வைக்கும் க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த ட்ரெய்லரில் திருப்பதி சிறையிலிருந்து தப்பித்து செல்லும்போது 8 தோட்டாக்களின் குண்டு பாய்ந்த நிலையில் புஷ்பா தீவிர காயம் அடைந்ததாக செய்திகள் பரவுகிறது. இதனால் அவர் தப்பித்து சென்ற அடர்ந்த காடுகளில் புஷ்பாவை வேட்டையாட ஒரு சிறப்பு படை களம் இறங்கி உள்ளது.

Also Read: அல்லு அர்ஜுனை ஓரங்கட்டிவிட்டு, ஷாருக்கானுக்கு பச்சை கொடி காட்டிய விஜய் சேதுபதி

அப்போது அவருடைய ரத்தக்காயம் படிந்த சட்டையை போலீசார் கண்டுபிடிக்கின்றனர். அந்தச் சட்டையில் 8 தோட்டாக்களின் துளை இருப்பதையும் போலீசார் பொதுமக்களிடம் காட்டுகிறார்கள். இதனால் அவர் உயிரோடு இருந்திருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறியதால் அப்பகுதியில் கலவரம் வெடிக்கிறது.

கோபத்தில் புஷ்பாவின் ஆதரவாளர்கள் வன்முறையை கையில் எடுத்து கடைகளை உடைத்தும், எரித்தும் கொண்டிருக்கின்றனர். மேலும் புஷ்பா அரசாங்கத்திற்கு எதிராக மரத்தை கடத்தி தவறான வழியில் சம்பாதித்தாலும் அந்த பணத்தை பொதுமக்களுக்காக பயன்படுத்தி இருக்கிறார்.

Also Read: பத்து தல படத்தில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?. ஆடவிட்டு வேடிக்கை பார்த்த ஆர்யா

ஏழைகளின் மருத்துவ செலவிற்கும், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்தும், வெள்ளத்தில் சிக்கி பரிதவித்த மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தும் ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். இவ்வளவு செய்த புஷ்பாவிற்காக பொதுமக்கள் ஒன்றாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஒரு மாதமாக கலவரம் தொடர்வதால் பெரும்பாலான பகுதியில் ஊரடங்கையும் அமல்படுத்தினர்.

மறுபுறம் புஷ்பா உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் ஜப்பான், சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பதுங்கியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும் புஷ்பாவை கொன்று புதைத்து விட்டு போலீஸ் நாடகமாடுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு தோன்றுகிறது. உண்மையில் புஷ்பா எங்கே? என பெரும் பரபரப்பை கிளப்புகிறது.

Also Read: 2023ல் வெளிவர இருக்கும் 10 ஹிட் படங்களின் 2-ம் பாகம்.. பொன்னியின் செல்வன் முடிவிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

கடைசியில் புலிகளை கண்காணிப்பதற்கான கேமராவில் காட்டு விலங்குகள் எல்லாம் 2 அடி பின்னாடி வச்சா, புலி வந்திருச்சின்னு அர்த்தம். அந்தப் புலியே இரண்டடி பின்னாடி வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம் என்ற பஞ்ச் டயலாக் உடன் அல்லு அர்ஜுன் புலியை விட ஆக்ரோஷமாக தெரிகிறார். இந்த க்ளிம்ஸ் வீடியோவை பார்த்த பலருக்கும் புல்லரித்து போனது. முதல் பாகத்தை போலவே புஷ்பா 2-வும் தாறுமாறாக இருக்கப் போகிறது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

புஷ்பா 2 படத்தின் டிரைலர் இதோ!