வரும் மார்ச் 30ஆம் தேதி ரிலீசாக இருக்கும் சிம்புவின் பத்து தல படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிம்புவுடன், கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.
நெடுஞ்சாலை, ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார். கன்னடத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான முஃப்தி படத்தின் ரீமேக்கான, இந்த படத்தில் சிம்பு ஏஜிஆர் என்னும் டான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலரை பார்த்த பிறகு சிம்பு இதில் ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருப்பது தெரிகிறது. பத்து தல படமானது பக்கா கமர்ஷியல் ஆக்சன் படமாக உருவாகி உள்ளது.
‘துரோகமும் துரோகியும் இந்த ஏஜிஆர்-க்கு புதிதில்லை’, ‘இங்க எவன் வாழனும், எவன் சாவனும் நாதான் முடிவு பண்ணனும்’ போன்ற டயலாக்கை பேசி சிம்பு மாஸ் காட்டி உள்ளார். அதேபோல் கௌதம் மேனனும் ’அடிபட்ட புலி போல என்ன அலைய வைக்கிற டா!’ , ‘என்ன கொன்று இல்லைனா நானே உன்னை கொன்றுவேன்’ என பஞ்ச் டயலாக் பேசி மிரட்டுகிறார்.
மணல் கொள்ளையடிக்கும் மாபியா கூட்டம் தலைவர் ஏஜிஆர் கேரக்டரில் சிம்பு நடித்து, பத்து தல படத்தின் டிரைலரை அசுர பலத்துடன் வெளியிட்டுள்ளார். டிரைலரில் பட்டாசு போல் பட படவென வெடிக்கும் தோட்டாக்களின் சத்தம் பார்ப்போரை நடுநடுங்க வைக்கிறது. இதன் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பத்து தல படத்தை, திரையில் பார்ப்பதற்கு இளசுகள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.