jailer-rajini

குட்டி சுவற எட்டிப் பார்த்தா கோடி பேரு உசுர கொடுப்பான்.. தலைவர் அலப்பறை செய்யும் ஜெயிலர் பட வீடியோ

Jailer Movie: நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. ஹுக்கும் தலைப்பில் வெளியான லிரிக்கல் வீடியோவில் ரஜினி கொல மாஸாக இருக்கிறார்.

ஏற்கனவே ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் வெளியாகி சூப்பர் ஸ்டார் ரசிகர்களை எரிச்சலடைய வைத்தது. ஏனென்றால் இந்தப் பாடல் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மாஸ் லுக்கில் இல்லாமல் தமன்னாவின் ஐட்டம் பாடலாகவே இருந்தது. இதில் ரஜினி கொஞ்சம் கூட ஒட்டாமல் தமன்னாவுடன் ஒரு சில ஸ்டெப்ஸ்களை மட்டும் போட்டு இருந்தார்.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக இருக்கும் ஜெயிலர் படத்தின் முதல் சிங்களை பார்த்துவிட்டு கலக்கத்தில் இருந்தவர்களுக்கு தற்போது 2வது பாடலான ஹுக்கும் வெளியாகி குஷிப்படுத்தியுள்ளது. இதில் ரஜினி கர்ஜுனையுடன், ‘இது டைகர் கட்டளை’ என சொல்வதும் ‘குட்டி சுவற எட்டிப் பார்த்தா கோடி பேரு உசுர கொடுப்பான்’ என ஒவ்வொரு வரிகளும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் செம மாஸாக இருக்கிறது.

இந்தப் பாடலை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த பாடல் வெளியாகுவதாக போஸ்டர் வெளியானதை தொடர்ந்து இன்று மாலை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஹுக்கும் பாடலுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக சில நிமிடங்களுக்கு முன்பு இந்த பாடலை பட குழு சமூக வலைதளங்களில் வெளியிட்டு ட்ரெண்டாக்கி உள்ளனர். இந்த பாடல் முழுவதும் ரஜினி கெத்தா அவருக்கே உரித்தான ஸ்டைலில் அலப்பறை செய்திருக்கிறார். பேக்ரவுண்டில் சிறைச் சிறைச்சாலையில் துப்பாக்கி, கத்தியுடன் தலைவர் பூந்து விளையாடுகிறார்.

Tamanna

ஒண்ணுமே தெரியாத புள்ள பூச்சி போல் தமன்னா நடித்த 5 படங்கள்.. ஆனா இப்ப ஐட்டம் நடிகையாக மாறிட்டாங்களே

படம் முழுக்க பேசிக்கொண்டே நடித்து அந்த சமயத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் தமன்னா.

bharathiraja

ரஜினி, கமலை சிகரம் தொட வைத்த பாரதிராஜாவின் 6 மறக்க முடியாத படங்கள்.. சப்பானியே ஒரே டயலாக்கில் தூக்கி சாப்பிட்ட பரட்டை

பாரதிராஜா முக்கால்வாசி உணர்ச்சிப்பூர்வமான கிராமத்து மண்வாசனை கூடிய படங்களை எடுப்பதில் அதிக ஆர்வம் செலுத்தக்கூடியவர்.

rajini

ரஜினியை ஏமாற்றிய தயாரிப்பாளர்.. லட்சத்தில் சம்பளம் வாங்கிய முதல் படம்

ரஜினி, தயாரிப்பாளர்கள் என்ன சம்பளம் கொடுக்கிறார்களோ அதை எந்தவித கேள்வியும் கேட்காமல் அப்படியே வாங்கி இருக்கிறார்.

rajini

திருமணத்திற்கு முன்பே உறவில் இருந்த ரஜினி பட நடிகை.. பல வருடம் கழித்து வெளியான உண்மை

மனம் ஒத்து போனதால் திருமணம் ஆகாமலேயே ஒரே வீட்டில் இருந்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்கள்.

vijay

நம்பிக்கையினால் டாப் ஹீரோக்களின் பட வாய்ப்பை பெற்ற 5 இயக்குனர்கள்.. தளபதி எடுத்திருக்கும் மிகப்பெரிய ரிஸ்க்

தொடர் தோல்விகளை வெங்கட் பிரபு கொடுத்திருந்தாலும் தளபதி விஜய் தன்னுடைய 68 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை இவருக்கு கொடுத்திருக்கிறார்.

rajini-actor-cinemapettai

ரஜினி பட்ட கஷ்டத்தை கால் தூசி கூட பட்டிருக்க மாட்டாரு.. அவரு சூப்பர் ஸ்டாரா ? கிழித்து தொங்கவிட்ட பிரபலம்

கடந்த 2000 ஆண்டு தொடங்கி இன்று வரை கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதே மிகப்பெரிய விவாதமாக இருக்கிறது.

Devayani-rajini-kamal

கமல், ரஜினி எல்லாம் ஹீரோவே இல்ல.. ஸ்டார் நடிகருக்கு சப்போர்ட் செய்து வாயை புண்ணாக்கிய தேவயானியின் புருஷன்

கமல், ரஜினியை விட தலைசிறந்த நடிகர் இவர்தான் என சர்ச்சையை கிளப்பிய தேவயானியின் கணவர்.

rajini-actor

மொய்தீன் பாய்க்கு குட்பை சொன்ன ரஜினி.. ட்ரெண்டாகும் புகைப்படம்

இது குறித்த அறிவிப்பு வெளிவந்தது மட்டுமல்லாமல் அந்த கெட்டப்பில் ரஜினி ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் போட்டோக்களும் மீடியாவில் வைரலானது.