hiphop-adhi-veeran

வீரன் படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு இப்படி ஒரு அநீதியா.. செய்தியாளர்களுக்கு கொடுத்த செம டோஸ்

இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் வீரன் படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறதா என செய்தியாளர் மூலம் தெரிய வந்துள்ளது.

ரீ என்ட்ரியில் பட்டையை கிளப்பும் 5 நடிகர்கள்.. லோகேசால் வெற்றி பெற்ற செகண்ட் இன்னிங்ஸ்

இந்த ஐந்து நடிகர்கள் கிடைத்த இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சினிமாவில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

vinay-1

பல வருடமாய் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்.. 41 வயது நடிகையை கரம் பிடிக்கும் டெவில் வினய்

வினய் கோட் சூட் போட்டு கொண்டு மாப்பிள்ளை ஆக கெத்தாக தன்னுடைய வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படம்.

Prakashraj

திரும்பத் திரும்ப இந்த 5 வில்லன்களை வைத்து ஒப்பேத்தும் தமிழ் சினிமா.. வாரிசுக்கு பின் சோலி முடிந்த பிரகாஷ்ராஜ்

தற்சமயம் கோலிவுட்டில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் 5 வில்லன்களின் லிஸ்ட்.

surya-rolex

2022-இல் வில்லன்களாக ஜெயித்த டாப் 5 ஹீரோக்கள்.. ஆரம்பிக்கலாமா என கெத்து காட்டிய விக்ரம் ரோலக்ஸ்

தமிழ்சினிமாவில் ஹீரோக்களாக நடித்து வெற்றி பெற்று வில்லனாகவும் நடித்து வெற்றி பெறும் நடிகர்கள்.

miskin

ரொமான்டிக் ஹீரோவாக இருந்து வில்லனாக மாறிய 10 நடிகர்கள்.. சாக்லேட் பாய் நடிகர்களை கொடூரமாக காட்டிய மிஸ்கின்

டாப் ஹீரோக்கள் 10 பேர் வில்லனாக அவதாரம் எடுத்தது, அவர்களுக்கு கை கொடுத்ததா என்பதை பார்ப்போம்.

ajithkumar-gun-shoot

நிஜ வாழ்க்கையிலும் ஸ்போர்ட்ஸ்மேனாக சாதித்து காட்டிய 6 பிரபலங்கள்.. அவார்டை குவித்து வரும் அஜித்

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது. ஆனால் விளையாட்டில் ஆர்வம் கொண்ட சிலர் சினிமாவிலும் சாதனை படைத்துள்ளனர். அதுமட்டுமின்றி சினிமா, விளையாட்டு என இரண்டிலுமே

atharvaa-vinay

கிடைத்த வெற்றியை காப்பாற்ற போராடும் 6 ஹீரோக்கள்.. நாசுக்காக ரூட்டை மாற்றிய வினய்

சினிமாவில் கதாநாயகனாக நடித்த நடிகர்கள் பலரும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். அவர்களது முயற்சி சிலருக்கு வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி தருகிறது. அப்படித்தான் தொடக்கத்தில் வெற்றிகளை ருசித்த 6 நடிகர்கள், தங்களுக்கு கிடைத்த வெற்றியை சரியாக தக்க வைத்துக் கொள்ளாமல் தடம் மாறிப் போய்விட்டனர்.

விமல்: ஆரம்பத்தில் இவர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி, அதன்பிறகு களவாணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. அதை தக்க வைத்துக் கொண்டு தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என பல படங்கள் இவரது நடிப்பில் வெளியானது.

ஆனால் இவர் சரியான கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்காமல் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்ததால் ரசிகர்களிடம் தன்னுடைய பெயரை டேமேஜ் ஆகி கொண்டார்.

ஜெய்: தளபதி விஜய்யின் தம்பியாக பகவதி படத்தில் மூலம் நடித்த வெகு சீக்கிரமே ரசிகர்களுக்குப் பரிட்சயமான ஜெய், ஹீரோவாகவும், 2வது கதாநாயகனாகவும் சென்னை-28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு-2 என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இருப்பினும் இவருடைய நடிப்பில் வெளியான ஒரு சில படங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் எண்ணித் துணிக என்ற திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி ரிலீஸாகிறது.

அதர்வா: முரளியின் மகனாக வாரிசு நடிகராக 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அதர்வா அதன்பிறகு முப்பொழுதும் உன் கற்பனை, பரதேசி அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்தார். இருப்பினும் கிடைத்த வெற்றியை சரியாக பயன்படுத்தாத அதர்வா கதைகளை தேர்வு செய்வதில் தடுமாறினார்.

இதனால் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் விடாமுயற்சியை விடாத அதர்வா ஒரு சில ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் குருதி ஆட்டம் என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

விஷ்ணு விஷால்: வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் நடிகர்களின் லிஸ்டில் இருக்கும் விஷ்ணு விஷால், தமிழ் சினிமாவிற்கு வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் நீர்ப்பறவை, சைக்கோ திரில்லர் திரைப்படமான ராட்சசன் படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இருப்பினும் அவரால் முன்னணி நடிகராக மாற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் இவர் படுக்கையில் படுத்திருப்பது போல் இருக்கும் நிர்வாண புகைப்படம் வெளியாகி ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

ஜீவா: இதுவரை 82 படங்கள் நடித்திருந்தாலும் டாப் ஹீரோ லிஸ்டில் மட்டும் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஜீவா, அதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். பிரபல தயாரிப்பாளரின் மகனாக தமிழ் சினிமாவில் மிக எளிதாகக் நுழைந்த ஜீவாவின் ஆரம்ப காலகட்ட படங்களான ஆசை ஆசையாய், தித்திக்குதே, கச்சேரி ஆரம்பம் போன்ற சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு கிடைத்த வெற்றியை காப்பாற்ற தெரியாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காத ஜீவா, தனது மார்க்கெட்டை இழந்து தற்போது வரை வளரும் நடிகராகவே தென்படுகிறார்.

வினய்: இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைத்தொடர்ந்து மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு என அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் எந்த படமும் அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கொடுக்காததால் வில்லனாக மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் அவதாரம் எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவருடைய உயரத்திற்கும் தோற்றத்திற்கும் வில்லன் வேடம் பக்காவாக செட் ஆகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் வில்லனாக மிரட்டியுள்ளார். ஹீரோவாக நடித்தபோது கிடைக்காத வரவேற்பு தற்போது வினய் தன்னுடைய ரூட்டை மாற்றி வில்லனாக நடிப்பதில் கிடைக்கிறது

சமீபத்தில் வில்லன் அவதாரத்தில் அசத்திய 5 நடிகர்கள்.. மக்கள் வெறுத்து ஒதுக்கிய நட்டி நட்ராஜ்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் புதிய டிரென்ட் ஒன்று உருவாகியுள்ளது. அதாவது ஹீரோவாக நடித்த பிரபலங்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் தங்களது மார்க்கெட் குறைந்துவிடும் என தயங்குவார்கள். ஆனால்

subramaniapuram

நட்பை விட்டுக்கொடுக்காமல் வெற்றி பெற்ற 7 படங்கள்.. 14 வருடங்களாக அசைக்க முடியாத சுப்ரமணியபுரம்

வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே! நமது சினிமாபேட்டை வலைதளம் வாயிலாக பல சுவாரசியமான சினிமா செய்திகளை தொடர்ந்து கண்டு வருகிறோம். இந்த பதிவில் நண்பர்களையும், நட்பையும் பிரதானமாக வைத்து