Archana

கோளாறாக செய்த வேலையால் விவாகரத்து வரை சென்ற அர்ச்சனா.. அன்புக்கு இப்படி ஒரு நோயா?

90ஸ் கிட்ஸ்களின் பேவரிட் ஆங்கராக இருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தன்னுடைய பெயரை கொஞ்சம் கெடுத்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

vj-priyanga

தொகுப்பாளிகளில் கில்லாடியாக ஜெயித்துக் காட்டிய 6 பேர்.. விஜய் டிவியை மொத்தமாக குத்தகை எடுத்த பிரியங்கா!

எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் ஒரு புன்னகையுடனே தொகுத்து வழங்குவதில் மிகப்பெரிய கில்லாடி. இவரை ரோல் மாடலாக வைத்து பலரும் ஆங்கராக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அர்ச்சனா வெளியிட்ட பதிவு.. ரோபோ ஷங்கருடன் வைரல்

மேடை ஏறியதும் தன்னுடைய கணீர் குரலும் சிரித்த முகத்துடன், இருக்கும் இடத்தை கலகலப்புடன் வைத்திருக்கும் திறமைசாலி தான் பிரபல தொகுப்பாளினி  அர்ச்சனா, சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின் விஜய் டிவி, புதுயுகம், ஜீ தமிழ், கலைஞர் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அத்துடன் பிக் பாஸ் 4வது சீசனில் பங்கேற்று பெரிதும் பிரபலமடைந்தார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுத்து வழங்கும்போது உடல்நல குறைவு ஏற்பட்டதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அர்ச்சனாவிற்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவருக்கு தொடையில் 16 தையல்கள் போடப்பட்டதால் நீண்ட நேரம் நிற்க முடியாதென்பதால் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்தார். தற்போது உடல்நலம் குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியதாக அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

vj-archana-cinemapettai
vj-archana-cinemapettai

அத்துடன் இவர் ரோபோ ஷங்கர் உடன் விளம்பர படம் ஒன்றில் நடித்திருக்கும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ ஆனது அர்ச்சனா ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அர்ச்சனாவிற்கு அவருடைய ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.