புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சினிமா வாய்ப்பு கிடைத்தும் கோட்டைவிட்ட 5 நடிகர்கள்.. இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்த சில நடிகர்கள் அடுத்தடுத்த படங்களில் தடுமாறி கதாநாயகன் அந்தஸ்தை இழக்கிறார்கள். அவ்வாறு சில படங்கள் வெற்றி தந்தாலும் ஒரு நிலையான ஹீரோவாக முடியாத நடிகர்களை பார்க்கலாம்.

ஜித்தன் ரமேஷ் : ஜித்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரமேஷ். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் ஜித்தன் ரமேஷ் என்று அழைக்கப்பட்டார். ஆனால் ஜித்தன் படத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. இதனால் தற்போது வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ரவி கிருஷ்ணா : செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி கிருஷ்ணா. முதல் படத்திலேயே ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். அதன்பிறகு கேடி படத்தில் நடித்திருந்தார். இதைதொடர்ந்த அவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. ஆரண்ய காண்டம் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் ரவிகிருஷ்ணா நடித்திருந்தார்.

நிதின் சத்யா : நிதின் சத்யா வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நிதின் சத்யா நடித்திருந்தார். அதே ஆண்டு வெளியான சத்தம் போடாதே படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஜீவன் : யுனிவர்சிட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜீவன். அதன்பிறகு காக்க காக்க படத்தில் பாண்டியா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற படங்கள் ஜீவனுக்கு வெற்றி பெற்றாலும் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு போகவில்லை.

அங்காடித்தெரு மகேஷ் : வசந்தபாலன் இயக்கத்தில் அங்காடி தெரு படத்தின் மூலம் அறிமுகமானவர் மகேஷ். இவருக்கு முதல் படமே மிகப்பெரிய வெற்றி கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகர் என்ற விஜய் விருதும் பெற்றார். அங்காடித்தெரு படத்திற்கு பிறகு மகேஷ் சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் வெற்றி பெறவில்லை.

Trending News