வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பலான காட்சியால் பறிபோகும் வாய்ப்பு.. மார்க்கெட் போயிடுமோ என்ற பயத்தில் விளக்கம் கொடுத்த தமன்னா

Actress Tamannah: சில வருடங்களாகவே இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்த தமன்னா இப்போது பரபரப்பு செய்தியாக மாறி இருக்கிறார். ஜெயிலர் படத்தில் இவர் நடிக்கிறார் என்று சொன்னபோது கூட பெரிய அளவில் யாரும் ரியாக்ட் செய்யவில்லை. ஆனால் அண்மையில் ஒரு வெப் தொடரில் நடித்த இவர் இப்போது ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறார்.

ஹிந்தியில் இவர் நடித்த ஜீ கர்தா என்ற வெப் தொடர் சமீபத்தில் வெளியானது. அதில் இடம்பெற்று இருந்த தமன்னாவின் படு மோசமான எல்லை மீறிய கிளாமர் அவதாரம் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. அதிலும் இவரை ஒரு ஐட்டம் நடிகையாகவே முத்திரை குத்தி பல செய்திகள் கிளம்பியது.

Also read: தமன்னா போல் நடித்து கேரியரை தொலைத்த நடிகை.. 12 வருடத்திற்கு பின் செய்த தவறை நினைத்து விடும் கண்ணீர்

அதோடு சேர்த்து இவருடைய மார்க்கெட் காலாவதியாகிவிட்டது என்ற ரீதியிலும் பேச்சுக்கள் கிளம்பியது. இருப்பினும் தன்னை பற்றி தாறுமாறாக வந்த எந்த விமர்சனத்திற்கும் பதில் கொடுக்காமல் இருந்த மில்க் பியூட்டி தற்போது முதல் முறையாக நான் ஏன் அப்படி நடித்தேன் என விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஏதாவது ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டால் நடிகைகள் பலரும் விளக்கம் என்ற பெயரில் சப்பை கட்டு கட்டுவார்கள். அப்படித்தான் தமன்னாவும் அந்த காட்சிக்கு அப்படி நடிக்க வேண்டும் என்பதால் தான் நான் நடித்தேன். கதையின் ஓட்டத்திற்கு அது தேவையாக இருந்தது என்று கூறியிருக்கிறார். மேலும் இது போன்ற ரிலேஷன்ஷிப் சம்பந்தப்பட்ட கதைகளில் இப்படி நடித்தால் தான் நன்றாக இருக்கும் என கேவலமான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

Also read: தன்னைவிட கம்மியான சொத்து.. காதலுக்கு காசு, அந்தஸ்து முக்கியமில்ல என கூவும் தமன்னா

இதன் மூலம் அவர் என்னுடைய நடிப்பு அர்ப்பணிப்பை பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்லாமல் சொல்லி இருக்கிறார். ஆனால் அவருடைய இந்த பூ சுத்தும் வேலையை யாரும் நம்புவதாக இல்லை. அது மட்டுமின்றி தமன்னா இப்படி ஒரு விளக்கம் கொடுத்ததற்கு பின்னால் ஒரு வலுவான காரணமும் இருக்கிறது.

ஏனென்றால் இப்படி மோசமான காட்சிகளில் நடித்த இவரை தங்கள் படங்களில் கமிட் செய்ய வேண்டாம் என்று முன்னணி நடிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள். ரஜினியே கூட இவரை ஏன் ஜெயிலர் படத்தில் நடிக்க வைத்தோம் என்று நொந்து போய் இருக்கிறார். இப்படி பட வாய்ப்புகள் அனைத்தும் பறிபோவதால் மார்க்கெட் பயத்தில் இருக்கும் தமன்னா அவசர அவசரமாக இப்படி ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Also read: பணத்தாசையால் வெப் சீரிஸிஸ் பக்கம் தவ்விய 5 நடிகைகள்.. மொத்தமாய் கவர்ச்சியில் இறங்கிய தமன்னா

Trending News