புதன்கிழமை, ஜனவரி 22, 2025

34 வயதாகியும் சிங்கிளாகவே சுற்றும் தமன்னா.. மில்க் பியூட்டியின் இந்த நிலைமைக்கு காரணமான எக்ஸ் காதலன்

Tamannaah : மில்க் பியூட்டியான தமன்னாவுக்கு ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க ரசிகர்கள் இருந்து வந்தனர். ஆனால் சில காதல் கிசுகிசுக்களில் சிக்கிய நிலையில் மார்க்கெட் இழந்து அக்கடதேசம் சென்று விட்டார். இதைத்தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றாலும் காவாலா பாடல் அவரை பட்டி தொட்டி எங்கும் மீண்டும் கொண்டு சேர்த்தது. இது தவிர ஹிந்தியில் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

சமீபத்தில் அம்பானி திருமணத்தில் தமன்னா கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் 34 வயதாகியும் தமன்னா திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார். இதற்கு காரணம் அவரது எக்ஸ் காதலன் தான் என்று கூறப்படுகிறது.

திருமணத்தை தள்ளிப்போடு தமன்னா

அதாவது பையா படத்தில் நடித்த போது தமன்னா மற்றும் கார்த்தி இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருந்தது. இருவரும் காதலிப்பதாக அப்போது சர்ச்சையும் கிளம்பியது. இதைத்தொடர்ந்து இதே ஜோடி சிறுத்தை என தொடர்ந்து சில படங்களில் நடிக்க ஆரம்பித்தனர்.

மேலும் இவர்களது காதலிக்கு கார்த்தியின் தந்தை சிவக்குமார் ஒற்றுக்கொள்ளவில்லை என்றும் அப்போது செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து விரைவாக கார்த்திக்கு ரஞ்சனி என்பவருடன் சிவக்குமார் திருமணம் செய்து வைத்தார்.

இதனால் மனம் உடைந்து சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்த தமன்னா மீண்டும் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் தன்னுடன் நடித்த விஜய் வர்மா உடன் காதல் சர்ச்சைகளில் சிக்கினார். ஆனாலும் இப்போதும் திருமணத்தை தள்ளிப் போடுவதற்கான காரணம் அவரது எக்ஸ் காதலன் தான் என்று கூறப்படுகிறது.

மில்க் பியூட்டி தமன்னா

Trending News