ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மார்க்கெட் இல்லாததால் 56 வயது நடிகருக்கு ஜோடியான தமன்னா.. ஐட்டம் டான்ஸால் இப்படி ஒரு நிலைமையா?

Actress Tamannaah : தமன்னா விஜய், அஜித் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். அதோடு பாலிவுட் பக்கமும் சென்று நிறைய படங்களில் நடித்த நிலையில் நடுவில் பிரேக் எடுத்துத்விட்டார்.

இதைத்தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் காவாலா என்ற பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார். இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானாலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை.

இது போக லஸ்ட் ஸ்டோரி என்ற வெப் சீரிஸில் தாராள கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இதுவே அவரது பெயர் சமூக வலைத்தளங்களில் மோசமாக டேமேஜ் ஆனது.

சுந்தர் சி-க்கு ஜோடியாகும் தமன்னா

இதை அடுத்து தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. ஆகையால் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டுக் கொண்டிருந்த தமன்னா இப்போது நடிகர் சுந்தர் சி உடன் அரண்மனை படத்தில் ஜோடி போட்டு நடிக்க இருக்கிறார். இவர்கள் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

அரண்மனை முதல் மற்றும் இரண்டாம் பாகம் ஒரு அளவு நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்கள் சறுகளை சந்தித்தது. இதை தொடர்ந்து மற்ற படங்கள் சுந்தர்சிக்கு பெரிய அளவில் வெற்றி கொடுக்காத நிலையில் மீண்டும் அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை எடுத்து வருகிறார்.

இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், ராசி கண்ணா, சந்தானம், யோகி பாபு என எக்கச்சக்க பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும் சமீபத்தில் ராசி கண்ணா மற்றும் தமன்னா ஆகியோரின் அரண்மனை 4 புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

அரண்மனை 4 படப்பிடிப்பு தளத்தில் சுந்தர் சி, தமன்னா

sundarc-tamannah
sundarc-tamannah

Trending News