வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஹீரோயினாக தமன்னா ஜொலித்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. இப்ப ஐட்டம் டான்ஸ்க்கு மட்டும் ஓகே சொல்லும் மில்க் பியூட்டி

Tamanna: ஆரம்பத்தில் ஹீரோயினாக பவ்யமாக நுழைந்த தமன்னா போகப் போக நடிக்கும் படங்களை பார்த்தால் இது அவரா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஐட்டம் டான்ஸ் ஆக மாறிவிட்டார். விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோகளுடன் ஜோடி சேர்ந்து முன்னணியில் வந்தார். இடையில் வாய்ப்பு எதுவும் சரியாக கிடைக்காததால் ஜெயிலர் படத்தில் காவாலா சாங்குக்கு இறங்கி குத்தாட்டம் போட்டார்.

அதன் பிறகு அனைத்து பக்கங்களிலும் தமன்னா என்றால் வாயை பிளக்கும் அளவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்து விட்டார்கள். அதே நேரத்தில் எங்க போனாலும் இந்த பாடல் மிகவும் பிரபலமாகி பட்டி தொட்டி எல்லாம் ஒலித்ததால் தற்போது தமன்னாவின் ரேஞ்ச் மாறிவிட்டது. அதற்கு ஏற்ற மாதிரி இவரை தேடி ஹீரோயின் வாய்ப்பு வந்தாலும் அதற்கெல்லாம் நோ சொல்லி விடுகிறார்.

ஏனென்றால் ஒரு படத்தில் நடிப்பதை விட தற்போது ஐட்டம் டான்ஸ் ஆடினால் எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக கல்லா கட்ட முடிகிறது. அதனால் சின்ன கல்லில் பெரிய லாபத்தை பார்க்கும் முயற்சியில் ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என்றால் சொல்லுங்கள் நான் ஆடி கொடுக்கிறேன் என்று இறங்கி விட்டார்.

Also read: தலைவர் படம்னா குத்தாட்டம் கண்டிப்பா வேணும்.. ஜெயிலர் தமன்னாவை மிஞ்ச வரும் வேட்டையன் நடிகை

இதெல்லாம் ஒரு பக்கம் ரசிகர்களை குஷி ஏற்றினாலும், இன்னொரு பக்கம் மறுபடியும் தமன்னாவை படங்களில் ஹீரோயின் ஆக எப்பொழுது பார்ப்போம் என்று ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படங்களான அயன், கண்டேன் காதலை, பையா, சிறுத்தை மற்றும் வீரம் போன்ற படங்களில் பார்த்த தமன்னாவை நாங்கள் மறுபடியும் பார்க்க வேண்டும் என்று ஆசையுடன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் தமன்னாவோ, இப்போதைக்கு ஹீரோயினாக நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் குத்தாட்டம் போட வேண்டும் என்றால் என்னை கூப்பிடுங்கள் நான் தாராளமாக வருகிறேன். அதுதான் எனக்கு பிடித்திருக்கிறது என்று கட்டன் ரைட் ஆக சொல்லி வருகிறார். அதனால் இனி தமன்னா இந்த மாதிரி பாடல்களில் ஆடுவதை தொடர்ந்து பார்க்கலாம்.

Also read: தெளிவே இல்லாமல் காதலனின் கோட்டை போட்டு போஸ் கொடுத்த தமன்னா.. வசமாக சிக்கிய புகைப்படம்.!

Trending News