வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வேண்டவே வேண்டாம் விட்டுவிடுங்கள் என ஒதுங்கிய தமன்னா.. வாரிக் கொடுக்கும் வள்ளலே துணை

தென்னிந்திய சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தமன்னா. இவர் கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்ஷன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு தமிழில் எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இதனால் தெலுங்கு பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பிய தமன்னா தற்போது தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தமன்னா கடந்த வருடம் நவம்பர் ஸ்டோரி என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார்.

இந்திரா சுப்ரமணியம் இயக்கிய அந்த வெப்தொடரில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். கிரைம் மற்றும் திரில்லர் பாணியில் உருவாகி இருந்த அந்த தொடர் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தது. இதனால் தமன்னாவுக்கும் நல்ல பெயர் கிடைத்தது.

மேலும் சின்ன பட்ஜெட், சில நாட்கள் மட்டுமே ஷூட்டிங் என்பதால் நடிகைகள் பலரும் இது போன்ற வெப்சீரிஸ்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த பாணியை தான் தற்போது தமன்னாவும் பின்பற்ற முடிவு செய்துள்ளார்.

இதனால் அவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற வெப்சீரிஸ் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்று இயக்குனர்களிடம் கேட்டு வருகிறார். இதன் மூலம் நல்ல பெயர் எடுப்பது மட்டும்தான் அவரது நோக்கம் என்றால் அது நிச்சயம் கிடையாது.

இந்த வெப்சீரிஸில் நடிப்பதன் மூலம் அவருக்கு ஒரு படத்திற்கு கிடைக்கும் அளவுக்கு அதிக சம்பளம் கிடைக்கிறது. மேலும் நடிக்கும் நேரமும் குறைவு என்பதால் முடிந்த அளவு இதிலேயே சம்பாதித்து விடலாம் என்று தமன்னா மாஸ்டர் பிளான் போட்டுள்ளார். இதனால் அவர் தனக்கு வரும் பட வாய்ப்புகளை வேண்டாம் என்று முடிவு செய்து தற்போதுவெப் சீரிஸில் மட்டும் அதிக கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளார்.

Trending News