வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சிவராத்திரியை அமர்க்களப்படுத்திய தமன்னா, பூஜா.. ஈஷா மையத்துக்கு போக இப்படி ஒரு காரணமா.?

Actress Tamannah: வருடம் தோறும் ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதில் பல இடங்களில் இருக்கும் மக்கள் உட்பட பிரபலங்களும் கலந்து கொள்வார்கள்.

அப்படித்தான் இந்த வருட மகா சிவராத்திரியை தமன்னா, பூஜா ஹெக்டே, சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அதேபோல் சங்கர் மகாதேவன் பக்தி பரவசத்தோடு பாடல்களை பாடி அனைவரையும் வைஃப் ஆக வைத்தார்.

அதைக் கேட்டு ஜக்கி பரவச நிலையில் ஆடியதெல்லாம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அதேபோல் சந்தானம் உருகி உருகி கண்ணீர் விட்டு பிரார்த்தனை செய்ததெல்லாம் மீடியாவில் வைரலானது.

ஈஷா யோகா மையத்தை நாடும் பிரபலங்கள்

இப்படி பிரபலங்கள் அனைவரும் தேடிச்செல்லும் இடமாக ஈஷா யோகா மையம் இருக்கிறது. சின்னத்திரை நடிகைகள் உட்பட பாலிவுட் பிரபலங்கள் கூட அங்கு வருகை புரிகின்றனர். இதற்கு சில காரணமும் இருக்கிறது.

அதாவது பணம், புகழ் என அனைத்தும் இருந்தாலும் கூட பிரபலங்கள் உண்மையில் நிம்மதியை இழந்து தவிக்கும் சூழலும் இருக்கிறது. அதனாலயே அவர்கள் இது போன்ற இடங்களுக்கு வந்த தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்கிறார்கள்.

இதை பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். உண்மையில் பல சர்ச்சைகளை கடந்து நிறுவப்பட்ட இடம் தான் ஈஷா யோகா மையம். இப்போதும் கூட சிவராத்திரி விழாவில் நடப்பவை விமர்சனமாக தான் இருக்கிறது.

ஆனால் பயில்வான் அதைப் பற்றி எல்லாம் பேசாமல் ஈஷா யோகா மையத்தில் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பும் இவர் இந்த விஷயத்தில் எதுவும் பேசாதது ஆச்சரியம்தான்.

Trending News