திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மனோரமா இடத்தை பிடிக்க வந்த 5 நடிகைகள்.. கடைசி வரை அசைக்க முடியாமல் ஆட்சி செய்த ஆச்சி

நாடக கலைஞராக இருந்த மனோரமா, சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி, காமெடி கதாநாயகியாக கோலிவுடை கலக்கியவர். குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். மனோரமா 1500 படங்கள் நடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரை ரசிகர்கள் ஆச்சி என அன்போடு அழைத்தனர். இவரை நடிகையர் திலகம் என்றே பலரும் அழைத்தனர். மனோரமா நடிகையாக மட்டுமில்லாமல் பின்னணி பாடகியாகவும் சிறந்து விளங்கினார்.

ஊர்வசி: இயக்குனர் நடிகர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஊர்வசி, நிறைய நகைச்சுவை படங்களில் நடித்து பட்டையை கிளப்பி இருக்கிறார். நிறைய நடிகைகள் நகைச்சுவை காட்சிகளில் நடித்து இருந்தாலும் ஊர்வசியின் அளவுக்கு யாராலும் வர முடியாது. கமலஹாசனுக்கு இணையாக திரையில் நடிக்க கூடிய திறமை உடையவர்.

Also Read:  சொந்த பாட்டிபோல் நடிப்பில் மின்னிய 5 நடிகைகள்.. அந்த இடத்தை நிரப்ப போராடும் தமிழ் சினிமா

கோவை சரளா: முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கோவை சரளா, இதுவரை 750 படங்களில் நடித்து இருக்கிறார். ஆச்சி மனோரமாவுக்கு பிறகு காமெடி கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க கூடிய நடிகை இவர். இவரை அடுத்த மனோரமா என்றே அழைக்கின்றனர். உலக நாயகன் கமலஹாசன் இவருடன் நடிக்க ஆசைப்பட்டு சதிலீலாவதி படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.

குண்டு கல்பனா: ஊர்வசியின் சகோதரியான கல்பனா தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். நடிகர் பாக்யராஜின் சின்ன வீடு படத்தில் இவருடைய நடிப்பு மிக சிறப்பாக இருக்கும். மேலும் கமலஹாசனின் சதிலீலாவதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Also Read:  நடிகைகள் நடித்த கடைசி படம்.. புகழின் உச்சியில் இருக்கும்போதே இறந்த நடிகை

பிந்து கோஷ்: கமலஹாசனின் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிந்து கோஷ் ஒரு மேடை நடிகையும் ஆவார். ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் போன்ற டாப் நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

பரவை முனியம்மா: நாட்டுப்புற பாடகியான பரவை முனியம்மா 2003 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன தூள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட 25 படங்களில் நடித்த இவர் மனோரமாவின் மறைவிற்கு பிறகு அவர் இடத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் இவரால் மனோரமா இடத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை.

எத்தனை நடிகைகள் எப்படி சிறப்பாக நடித்தாலும் மனோரமாவுக்கு நிகர் என்று யாருமே இன்னும் வரவில்லை. மறைந்தும் இன்றளவும் ஆச்சி மனோரமா கோலிவுட்டில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.

Also Read: 3 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த ஒரே நடிகை.. மனோரமாவுக்கு அடுத்தபடியாக சினிமாவை ஆட்சி செய்தவர்

 

Trending News