புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பயணத்திலேயே கதையை சுவாரசியமாக அசத்திய 7 படங்கள்.. செட் போடும் செலவே இல்லையாம்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! தமிழ் சினிமாவில் அவ்வளவாக யாரும் தொடாத ஒரு ஜானர் ரோடு மூவிஸ் எனப்படும் பயண திரைப்படங்கள். வெகு சில தமிழ் திரைப்படங்களில் மட்டுமே பயணத்தை முக்கியமான அம்சமாகக் கொண்டு வெளிவந்திருக்கின்றன. இந்தக் கட்டுரையில் தமிழில் வெளிவந்த பயண திரைப்படங்களை பார்க்கலாம்.

10 என்றதுகுள்ள: விக்ரம், சமந்தா மற்றும் பலர் இணைந்து நடித்த திரைப்படம் 10என்றதுக்குள்ள. சமந்தா இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் சாலைப் பயணம் முக்கிய பங்கு வகிக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஒரு சமந்தாவை காப்பாற்றுவதற்காக மற்றொரு சமந்தாவை கடத்திக் கொண்டு போய் அங்கு மாற்றும் செய்யவிருக்கும் இந்த திரைக்கதை மக்களிடத்தில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இந்த திரைப்படத்தை விஜய் மில்டன் அவர்கள் இயக்கியிருந்தார்.

அன்பே சிவம்: நல்லசிவம் என்கிற கம்யூனிஸ்ட் மனிதருக்கும் அன்பு என்கிற நவநாகரீக மனிதனுக்கும் இடையில் நடக்கும் பயண அனுபவங்களே இந்த திரைப்படம். நல்லசிவம் ஆக கமலும் அன்பரசன் ஆக மாதவனும் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் கொல்கத்தாவில் மாட்டிக்கொள்ளும் மாதவனும் கமலும் ஒன்றாக பயணிக்க வேண்டிய கட்டாயம். ட்ரெயின், பஸ், ஆம்புலன்ஸ் என்று மாறி மாறி பயணிக்கும் இவர்கள் இறுதியாக உயரிய நோக்கத்திற்காக வேலை செய்வது அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கும். தமிழ் சினிமாவின் முக்கியமான இந்த திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார் கமல் ஹாசன் திரைக்கதை எழுதி இருந்தார்.

பையா: கார்த்தியும் தமன்னாவும் இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படத்தை லிங்குசாமி இயக்கி இருந்தார். அனைத்து பாடல்களும் மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாம்பே செல்லும் தமன்னாவுடன் டிரைவர் என்று பொய் சொல்லி கார்த்தி பயணிக்கிறார். பயணத்தின் முடிவில் இருவருக்கும் காதல் பிறக்கிறது. உண்மையில் இந்த படம் வெளிவந்த போது கார்த்தியும் தமன்னாவும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இந்த அதிரடி ஆக்சன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அச்சம் என்பது மடமையடா: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உட்பட பலர் நடித்திருந்த திரைப்படம் அச்சம் என்பது மடமையடா. தன்னுடைய புதிய பைக்கில் கன்னியாகுமரி வரை செல்லும் எண்ணத்துடன் சிம்பு புறப்பட அவருடன் மஞ்சிமா மோகன் பயணிக்கிறார். அந்த பயணத்தின் போது அவர்கள் இருவருக்குள் ஏற்படும் காதல் மற்றும் பல திடுக்கிடும் சம்பவங்களை கொண்டது இந்த திரைப்படம். ஹிந்தி பாப் பாடகர் பாபா செகல் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

கயல்: வாழ்க்கையில் தேடல்களை தேடிச்செல்லும் கதாநாயகனும் அவனது நண்பனையும் பற்றிய கதை கயல். கயல் மீது கொள்ளும் காதல், அதற்காக கதாநாயகன் செய்யும் இந்த பயணமே படத்தின் தனிச்சிறப்பு. இந்த திரைப்படத்தின் மூலம் ஆனந்தி அறிமுகமான காரணத்தால் அவரை கயல் ஆனந்தி என்று அன்புடன் அழைக்கிறோம்.

சரோஜா: ஹைதராபாத்தில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக சாலையில் கிளம்புகிறார்கள் நான்கு நண்பர்கள். எதிர்பாராதவிதமாக இவர்கள் நால்வரும் பணக்கார சிறுமி ஒருவரை கடத்திய கும்பலிடம் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தையே சரோஜா படத்தின் கதை. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் தான் முதன் முதலாக காஜல் அகர்வால் அறிமுகமானார். மிகவும் பிரபலமான பாடல்களை கொண்ட இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

நந்தலாலா: இயக்குனர் மிஷ்கின் அவர்கள் எழுதி இயக்கி நடித்த இந்த திரைப்படத்தில் அவருடன் ஸ்நிக்தாவும் நடித்திருந்தார். தாயை பார்க்க செல்லும் சிறுவனுடன் இணைந்து தனது தாயையும் பார்க்க செல்கிறார் மிஸ்கின். அப்போது அவர்களுக்குள் ஏற்படும் வித்தியாசமான அனுபவங்களே இந்த திரைப்படம். இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கும்.

Trending News