ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மகனின் கல்யாணத்தில் ட்ரெண்டான நெப்போலியன்.. நடிப்பில் இன்றுவரை மறக்க முடியாத 6 கேரக்டர்கள்

Napolean: சமீபத்தில் தன் மகனின் கல்யாணம் நடந்ததில் பெரிய அளவில் ட்ரெண்டானார் நடிகர் நெப்போலியன். என்னதான் அமெரிக்காவில் செட்டில் ஆன பெரிய பிசினஸ்மனாக இப்போது நாம் கண்களுக்கு தெரிந்தாலும், ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்த சினிமா படங்கள் இவரை ஒரு தரமான நடிகராக 90ஸ் கிட்ஸ்களிடையே பிரபலப்படுத்தியது. நெப்போலியன் நடிப்பில் கண்டிப்பாக இந்த ஆறு படங்களை மிஸ் பண்ணாமல் பார்த்து விடுங்கள்.

இன்றுவரை மறக்க முடியாத 6 கேரக்டர்கள்

புது நெல்லு புது நாத்து: நடிகர் நெப்போலியன் அறிமுகமான படம் தான் புது நெல்லு புது நாத்து. 28 வயதில் அறுவது வயதில் வில்லனாக இந்த படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமாகும் போது இளைஞனாக நடித்தால் என்ன கிழவனாக நடித்தால் என்ன என்ற முடிவு தான் இதற்கு காரணம். ஹீரோயினின் அப்பாவாக மிரட்டும் வில்லனாக சங்கரலிங்கம் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். நெப்போலியன்.

எஜமான் (வல்லவராயன்): சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமா பாதையில் ஒரு பெரிய மைல்கல் தான் எஜமான் படம். இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக வல்லவராயன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார் நெப்போலியன். ரஜினி போன்ற ஒரு பெரிய பிம்பத்திற்கு முன்னால் வளர்ந்து வரும் வில்லனாக, எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் மிரட்டி இருப்பார் நெப்போலியன்.

கிழக்கு சீமையிலே (சிவனாண்டி): பாசமலர் படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு அண்ணன் தங்கை சென்டிமென்ட் காவியம் என்றால் அது கிழக்கு சீமையிலே தான். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ராதிகாவின் கணவராக சிவனாண்டி என்னும் கேரக்டரில் நடித்திருப்பார் நெப்போலியன். மச்சானிடம் வறட்டு கௌரவம் காட்டி அதுவே பின்னாளில் குடும்பப் பகையாக மாறி, மனைவி இறந்த பிறகு அத்தனையும் நினைத்து கண்ணீர் விடும் கேரக்டரின் பின்னிப் பெடல் எடுத்து இருப்பார்.

எட்டுப்பட்டி ராசா (சிங்கராசு): எட்டுப்பட்டி கிராமத்தையும் கட்டிக் காக்கும் காவலனாக சிங்கராசு கேரக்டரில் நடித்திருப்பார் நெப்போலியன். ஊர்காவலனாக இருக்கும் சிங்கராசு துரோகத்தால் தன் மனைவியை இழந்த பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் வெளியான பஞ்சுமிட்டாய் சேலை கட்டி பாடல் இன்று வரை பட்டி தொட்டி எங்கும் கொண்டாடப்படும் ஒன்று.

தென்காசி பட்டணம் (தாஸ்): சரத்குமார் மற்றும் நெப்போலியன் கூட்டணியில் வெளியான படம் தான் தென்காசி பட்டணம். முதல் பாதையில் நண்பர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கும் கூத்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும். இரண்டாம் பாதியை காதல் வந்த பெண் நண்பர்கள் அது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை உணர்ச்சிபூர்வமாக காட்டி இருப்பார்கள். இதில் நடிகர் நெப்போலியன் கரடு முரடான கதாபாத்திரத்தில் தாஸ் ஆகவே வாழ்ந்திருப்பார்.

தசாவதாரம் (குலோத்துங்க சோழன்): கமலஹாசனின் ரெக்கார்டு பிரேக் படமான தசாவதாரம் படத்தில் நெப்போலியன் குலோத்துங்க சோழன் கேரக்டரில் நடித்திருப்பார். ஒரு காட்சி தான் என்றாலும் இந்த படத்தில் இந்த கேரக்டரை யாராலும் மறக்கவே முடியாது. கமலஹாசன் மீது உள்ள அன்பின் காரணமாக இந்த ஒரு காட்சி நடிப்பதற்காக நெப்போலியன் அமெரிக்காவிலிருந்து வந்து நடித்துக் கொடுத்ததாக கமல் நிறைய பேட்டிகளில் சொல்லி இருப்பார்.

Trending News