செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

நடிப்பதற்கு முகம்,கலர் அவசியமில்லை.. திறமையை மட்டும் நம்பி ஜெயித்து காட்டிய 6 நடிகர்கள்

ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கட்டாயம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஒரு எழுதப்படாத விதி இந்திய சினிமாவிலேயே உள்ளது. ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறிந்து அழகையும் தாண்டி நடிப்புத்திறமை தான் முக்கியம் என நிரூபித்து, தாங்கள் நடித்த பல திரைப்படங்களை ஹாட்ரிக் வெற்றி கொடுத்து, இன்று வரை ரசிகர்கள் முன்பு சிறந்த நடிகர்களாக முடிசூடி கொண்டிருக்கும் 6 நடிகர்களைப் பற்றிய தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

ராஜ்கிரண்: 1999ஆம் ஆண்டு வெளியான என்ன பெத்த ராசா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ராஜ்கிரன். இவரை திரையரங்கில் முதன்முதலில் பார்த்த ரசிகர்கள் இவரெல்லாம் ஒரு முகமா, இவரை யார் ஹீரோவாக செலக்ட் செய்தார் என்று கடுமையாக விமர்சித்தனர். ஆனால் பிற்காலத்தில் ராஜ்கிரண் போல ஒரு நடிகர் யாராலும் பார்க்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரின் நடிப்பு அமைந்தது. இன்றுவரை பல திரைப்படங்களில் துணை நடிகர் கதாபாத்திரத்திலும் கனகச்சிதமாக பொருந்தி நடித்து வருகிறார்.

Also read: கவுண்டமணியுடன் ஒருபோதும் இணையாத டி ராஜேந்தர்.. பின்னால் இருக்கும் பலே காரணம்

தியாகராஜன்: நடிகர் பிரஷாந்தின் தந்தையும் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட தியாகராஜன் தமிழ் சினிமாவில் புதுவிதமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்தவர். 1988ஆம் ஆண்டு வெளியான பூவுக்குள் பூகம்பம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஆரம்பத்தில் இவரது முகம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வசீகரிக்கவில்லை என சொல்லலாம். ஆனால் பிற்காலத்தில் இவரது நடிப்பை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் கூட்டம் இவருக்காக இருந்தது.

டி ராஜேந்தர்: ஆரம்ப காலகட்டத்தில் கௌரவத் தோற்றத்தில் மட்டுமே நடித்து வந்த டி ராஜேந்தர் பிற்காலத்தில் பல திரைப்படங்களில் நடிகராக நடித்தார். இவரது மகனும், நடிகருமான சிம்பு ஹீரோவாக வலம் வந்த காலகட்டத்திலும், இவரும் ஹீரோவாக ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். இவரது திரைப்படங்கள் பல விமர்சிக்கப்பட்டாலும் இவரது இசைக்கும், இவரது வசனங்களுக்கும் இன்று வரை ரசிகர்கள் அதிகம்.

Also read: எவ்வளவோ போராடியும் தோல்வியடைந்த டி ராஜேந்தர்.. சிம்பு படத்தால் வந்த வினை

பார்த்திபன்: நடிப்பதற்கு நிறம் ஒன்று அவசியம் இல்லை என்பதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்டோர் நிரூபித்தது போல பார்த்திபனின் நடிப்பை சொல்லலாம்.இவர் படங்களில் பேசும் குண்டக்க மண்டக்க வசனங்கள், இன்று வரை பலருக்கும் பிடித்தமானது. இவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக தென்றல், அழகி உள்ளிட்ட திரைப்படங்களில் பார்த்திபனின் நடிப்பு இன்று வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. தற்போது வரை பல திரைப்படங்களில் இயக்குனராகவும், நடிகராகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பாண்டியன் :மண்வாசனை திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகர் பாண்டியன், வில்லனாகவும், ஹீரோவாகவும், துணை நடிகராகவும் நடித்து அசத்தியவர். 2008ஆம் ஆண்டு நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்த பாண்டியன், தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களை அள்ளிக்கொடுத்தவர். இவரது முகம் வசீகரம் தன்மையுடன் இல்லை என்றாலும் இவரது நடிப்புகாகவே ரசிகர்கள் இவருக்கு ரசிகர் மன்றம் வைத்தார்கள் என்று சொல்லலாம்.

Also read: டி ராஜேந்தர் கொடுத்த தரமான 5 ஹிட் படங்கள்.. பெண்களைக் கவர்ந்த திரைப்படங்கள்

முரளி: ஹீரோ என்ற எந்த ஒரு வரையறையும் இவரது முகத்தில் பார்க்க இயலாது.கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பார் என்று சொல்வதற்கு ஏற்றார்போல், வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தில் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்ட கருப்புதான் எனக்கு பிடித்த கலர் பாடலில் முரளியை வர்ணிக்கும் விதமாக வரிகள் இடம் பெற்றிருக்கும். அந்த அளவிற்கு இவரை ஹீரோவாகவும், தங்கள் வீட்டில் உள்ள ஒரு கதாபாத்திரமாக மக்கள் கொண்டாடினர். அப்படிப்பட்ட நடிகர் முரளி தனது 46வது வயதில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

Trending News