தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் பெரும்பாலும் ஒரே சாயலில் இருப்பதால் தமிழில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இதனால் தமிழ் ஹீரோக்களுக்கு தெலுங்கிலும் ரசிகர்கள் ஏராளம். அவ்வாறு தெலுங்கு சினிமாவில் டாப் 5 இடங்களை பிடித்த தமிழ் ஹீரோக்களை பார்க்கலாம்.
ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். ரஜினிகாந்திற்கு தமிழ் சினிமாவில் இருக்கும் ரசிகர்களுக்கு இணையாக தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்கள் உள்ளனர். தெலுங்கில் இவருடைய திரைப்படங்கள் வெளியாகிறது என்றாலே திரையரங்குகளில் திருவிழாக்கள் போல் கொண்டாடுவார்கள். ரஜினிகாந்தின் பல படங்கள் தெலுங்கு சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்றுள்ளது.
சூர்யா: ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தின் மூலம் சூர்யா இந்தியா முழுவதும் பிரபலமானார். சூர்யாவின் பெரும்பாலான படங்கள் தமிழில் வெளியாகும் போது அதே நேரத்தில் தெலுங்கிலும் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெறுகிறது. தற்போது தெலுங்கு ஹீரோக்களுக்கு இணையான ரசிகர்களை சூர்யா பெற்றுள்ளார்.
விஜய்: ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் நண்பன். தெலுங்கில் விஜய்யின் முதல் படமாக நண்பன் படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் தெலுங்கில் விஜய் அறிமுகமானாலும் தெறி படம் இவரை மேலும் பிரபலமாகியது. தெலுங்கு சினிமாவில் வெளியாகும் விஜய்யின் படங்கள் வசூல் சாதனை படைக்கிறது.
சமீபகாலமாக விஜய் படங்கள் தெலுங்கு சினிமாவிலும் சாதனை படைத்து வருகிறது. தற்போது தெலுங்கு இயக்குனருடன் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால் இனி தெலுங்கிலும் விஜய்யின் வசூல் ஆரம்பம் என பலரும் கூறி வருகின்றனர்.
அஜித்: தெலுங்கு ரசிகர்களுக்கு அஜித்தின் கமர்சியல் படங்கள் கவனத்தை ஈர்க்கிறது. அஜித்தின் பெரும்பாலான படங்கள் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அஜித் படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர். தெலுங்கில் வர்த்தகம் ரீதியாகவும் அஜித்தின் படங்கள் வெற்றி பெறுகிறது.
விஷால்: தெலுங்கில் சரளமாக பேசக்கூடிய தமிழ் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஷால். இவருடைய படங்களில் தெலுங்கு டப்பிங்கையும் அவரே பேசுவார். தெலுங்கில் பல மேடைப் பேச்சுக்கள் மற்றும் அழகான உரையாடல்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். தெலுங்கில் விஷாலின் படங்களும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெறுகிறது.