Vijay: தற்போது தமிழகமே அதிர்ச்சியில் இருக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே மாணவி பலவந்தப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை தற்போது கடும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் உருவாக்கி இருக்கிறது. இதற்கு காரணமான ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால் இந்த விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. பல அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் முக்கியமான குற்றவாளி இருக்கிறார். அவரை காப்பாற்ற தனி அரசியல் நடக்கிறது என பிஜேபி அண்ணாமலை உள்ளிட்டோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஓடி ஒளிந்த கமல்
அதேபோல் தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்துக்களும் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். ஆனால் அவரை தவிர தமிழ் திரை உலகில் இருந்து யாரும் வாய் திறக்கவில்லை.
பொதுவாக சமூக குற்றங்களுக்கு எதிராக கமல், சூர்யா, சித்தார்த், ஜிவி பிரகாஷ் ஆகியோர் குரல் கொடுப்பார்கள். அதிலும் கட்சி ஆரம்பித்த பிறகு ஆண்டவர் எல்லாவற்றிற்கும் கண்டனத்தை பதிவு செய்வார்.
ஆனால் இப்போது எந்த நடிகரும் இந்த சம்பவத்திற்கு எதிராக வாய் திறக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை பெரிதாக யோசிக்க தேவையில்லை.
எல்லாமே சுய லாபம் தான். ஒரு படம் நன்றாக இருந்தால் சம்மந்தப்பட்டவர்களை கூப்பிட்டு பாராட்டுபவர்கள் இப்படி ஒரு கொடூரத்திற்கு எதிராக கண்டனத்தை தெரிவிக்கவில்லை.
இதை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர். மக்களுடைய பணம் மட்டும் வேண்டும். ஆனால் மக்களின் பிரச்சனைக்கு குரல் கொடுக்க மாட்டோம் என்பதில் என்ன நியாயம்.
அப்பொழுது எதற்காக உங்கள் படங்களை பார்க்க வேண்டும் என இணையவாசிகள் பொங்கி வருகின்றனர். மேலும் எப்போதும் அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்தது விஜய் தான் என அவரின் தொண்டர்கள் பதிவிட்டு வருகின்றனர்.