சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

உதயநிதிக்கு முன்பே அமைச்சரான சினிமா பிரபலங்கள் .. காமெடி நடிகரை அமைச்சராக்கி அழகு பார்த்த மக்கள் திலகம்

தென்னிந்தியாவை பொறுத்தமட்டிலும் அரசியலும், சினிமாவும் வேறு வேறு இல்லை. சினிமாவில் ஜெயித்தவர்கள் பலர் மாநிலத்தின் முதலமைச்சராக ஆகி இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான எம்ஜிஆர் சாகும் வரை முதலமைச்சராக இருந்தார். அந்த வரிசையில் இப்போது நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதியும் இணைந்து இருக்கிறார்.

ஐசரி வேலன் : சினிமா தயாரிப்பாளர் ஐசரி வேலனின் அப்பா தான் ஐசரி கணேஷ். இவர் சிவாஜி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தாலும், மக்கள் திலகம் எம்ஜிஆரின் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது கட்சியில் இணைந்தார். 1977ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிமுக சார்பில் அமைச்சரானார்.

Also Read: 56 வயதில் ஸ்டாலினுக்கு கிடைத்த பதவி.. 45 வயதிலேயே கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின், என்ன பொறுப்பு தெரியுமா?

திருச்சி சௌந்தரராஜன்: 1960, 70களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் திருச்சி சௌந்தரராஜன். இவர் அகில உலக எம்ஜிஆர் ரசிகர் மன்ற தலைவராகவும் இருந்து இருக்கிறார். அதிமுக சார்பில் மூன்று முறை தேர்தலில் நின்று அமைச்சராகி இருக்கிறார்.

நெப்போலியன்: நடிகர் நெப்போலியன், வில்லன் மற்றும் ஹீரோவாக பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவர் பின்னர் திமுகவில் தன்னை இணைத்து கொண்டார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

விஜய் வசந்த்: சென்னை 28, தோழா, சரோஜா போன்ற படங்களில் நடித்தவர் தான் விஜய் வசந்த். இவர் பிரபல வணிக நிறுவனமான வசந்த் & கோ வின் உரிமையாளரான வசந்தகுமாரின் மகன் இவர் தான். வசந்தகுமார் நாங்குநேரி எம்பியாக இருந்த போது இருந்ததினால், நடந்த இடைத்தேர்தலில் விஜய்வசந்த் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Also Read: அமைச்சரான உடன் கமலுக்கு வைத்த முதல் ஆப்பு.. ஆண்டவரை அம்போவென விட்ட உதயநிதி

ரோஜா: 1992 ஆம் ஆண்டு ஆர் கே செல்வமணியின் இயக்கத்தில் வெளியான செம்பருத்தி படம் மூலம் சினிமா இண்டஸ்ட்ரிக்குள் வந்தவர் நடிகை ரோஜா. 50 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக இவர் நடித்திருக்கிறார். இவர் இப்போது ஆந்திர மாநில சட்டமன்ற அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்: ரெட் ஜெயண்ட் சினிமா நிறுவனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான உதயநிதி, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற இவர் தற்போது அமைச்சர் ஆகி இருக்கிறார்.

Also Read: ஒரே மாதிரி நடிப்பை வெளிப்படுத்திய உதயநிதியின் 5 படங்கள்.. லாஜிக் இல்லாமல் குழப்பி விட்டதால் ஆன பிளாப்

Trending News