Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

நடிகைகளிடம் கோடிகள் எப்படி வருகிறது? பின்னால் இருக்கும் பணமும் அதிகாரமும் என்ன?

நடிகைகளிடம் கோடிகள் எப்படி வருகிறது? பின்னால் இருக்கும் பணமும் அதிகாரமும் என்ன?

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு கேள்வி அதிகமாக பேசப்படுகிறது. சினிமா மற்றும் சீரியல் துறையில் இருக்கும் சில நடிகைகளிடம் இவ்வளவு பெரிய அளவில் பணம், விலையுயர்ந்த பொருட்கள், வெளிநாட்டு பயணங்கள் என வாழ்க்கை முறை எப்படி […]

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு கேள்வி அதிகமாக பேசப்படுகிறது. சினிமா மற்றும் சீரியல் துறையில் இருக்கும் சில நடிகைகளிடம் இவ்வளவு பெரிய அளவில் பணம், விலையுயர்ந்த பொருட்கள், வெளிநாட்டு பயணங்கள் என வாழ்க்கை முறை எப்படி உருவாகிறது? அந்த பணம் எங்கிருந்து வருகிறது என்பதுதான்.

சினிமா உலகில் பணமும் புகழும் இருக்கும் இடத்தில், அதை சுற்றி அதிகாரமும் செல்வாக்கும் வருவது புதிதல்ல. பெரிய தொழிலதிபர்கள், அரசியல் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுடைய தனிப்பட்ட பொழுதுபோக்குகளுக்காக சினிமா பிரபலங்களை அணுகுவது பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. இதில் மேனேஜர்கள், பி.ஆர்.ஓக்கள் போன்றவர்கள் இடைத்தரகர்களாக செயல்படுவதாகவும் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.

சிலருக்கு வெளிநாட்டு பயணம், விலையுயர்ந்த பரிசுகள், ஆடம்பர வாழ்க்கை என பணத்தை செலவு செய்வது பெரிய விஷயமாகவே இருக்காது. குறிப்பாக பணம் அதிகமாக இருக்கும் சிலர் தங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பார்கள்.

ஆனால் இதை ஒட்டுமொத்த நடிகைகளுக்கும் பொருத்திப் பார்ப்பது சரியாக இருக்காது. சினிமாவில் உழைத்து சம்பாதித்து, தங்களுடைய தொழில் மூலம் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் இருக்கிறார்கள். அதே நேரத்தில், சினிமா உலகை சுற்றி பணம், அதிகாரம், செல்வாக்கு ஆகியவை எப்படி விளையாடுகின்றன என்பதையும் மறுக்க முடியாது.

இறுதியில் பிரச்சனை நடிகைகள் மட்டுமல்ல. பணம் வைத்திருப்பவர்கள் அந்த பணத்தை எதற்காகவும் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதும், அந்த கருப்பு பணத்துக்கு பின்னால் பல ரகசியங்கள் உள்ளன.

சினிமா உலகம் வெளியில் இருந்து பார்ப்பதற்கு எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறதோ, அதற்கு பின்னால் பணமும் அதிகாரமும் எப்படி வேலை செய்கிறது என்பது அதைவிட பெரிய கதை.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.